விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கOct 15, 2023
தஞ்சாவூர் மாவட்டம்,பூதலூர் தாலுக்கா,திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் 1500 ஆண்டு பழமையான திரு நியமம் மாகாளத்து காளா பிடாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் ஆட்சிக்காலத்தில் பெரும்புகழோடு விளங்கிய தளம். இங்கு பேரரசர் 1008 லிங்கங்களையும் அமைத்து வணங்கியுள்ளார். பெரும் வெள்ளம் மற்றும் மாலிக்காபூர் படையெடுப்பாள் இத்திருக்கோயில் அழிந்து போயிற்று. தற்போது அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் நேமம் கிராம மக்கள் துணையோடு இக்கோயில் மீண்டும் புனரமைத்து வருகின்றனர். நவராத்திரி முதல் நாள் (15-10-2024) விழாவின் உபயதாரர் , தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில பொறுப்பாளர் ஆர்.வி .பாலமுருகன் தலைமையில் காளா பிடாரி நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் நாட்டுப்புற பாடகர் வளப்பக்குடி வீரசங்கர் அவர்களுக்கு முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக இயல்,இசை,நாடக துறையில் அவர் ஆற்றிய தொண்டுகளை பாராட்டும் விதமாக "புலவர் சேக்கிழார் முத்தரையர் விருது " வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆர்.வி.பாலமுருகன்,அறக்கட்டளை துணைத்தலைவர் ஜோதி,செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன், வளப்பக்குடி தாமரைச்செல்வன், வளப்பக்குடி வெங்கடேஷ், அகரப்பேட்டை செல்வராஜ்,நேமம் தமிழ்வாணன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காளா பிடாரி அருட்பிராசதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.