|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 08, 2023

முத்தரைய ஊராளி

முத்தரையர் குலமக்கள் தமிழகம் முழுவதும் வாழக்கூடிய இனம்.நிலத்துக்கு ஏற்ப தங்களின்  வரலாற்றையும்,வாழ்வியலையும் புதிதாக உருவாக்கி வாழ்ந்து வருபவர்கள். மேலும் முத்தரையர் இனத்துக்கே உரிய "ஆளுமை" மட்டும் அனைத்து பகுதியிலும் நிலைநாட்டியுள்ளனர்.

குறிப்பாக:
     1)மூவேந்தர்களின் நாட்டை ஆட்சி செய்ததால் முத்தரையர் எனவும்,
     2)பல கிராமங்களை நாடு என கட்டமைப்பில் ஆட்சி செய்வதில் மிராசு, அம்பலகாரர்,அம்பலம்,சேர்வை எனவும்,
     3)ஊரை ஆட்சி செய்வதில் ஊராளி எனவும்,
      4)கோவில்,நிலங்களை காத்தல்,ஆட்சி செய்வதில் காடன்,காவல்காரன் எனவும்,
      5)பாளையங்களை ஆட்சி செய்ததால் பாளையக்காரர் எனவும்,பல பெயர்களில் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

உண்மையாக தமிழ்நாட்டில் நாடாண்ட சமுகம் என்றால் அது நமக்கு மட்டுமே பொருந்தும்.

ஊராளி,அம்பலகாரர்,வலையர்,வேடுவர் என பல பெயர்களில் இன்று தனி சமுகமாக வாழ்ந்தாலும் நாம் அனைவரும் ஒரே தாய்ப்பிள்ளைகள்தான்.

பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் நாம் பொதுவாக முத்தரையர் என்ற பெயரை பயன்படுத்த காரணம் தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பெரும் பேரரசர் முத்தரையர் மன்னர்களின் வம்சாவளியில் வந்தவர்கள் என்ற பெருமையும்,கர்வமுமே நாம் முத்தரையர் என்று கூறுகிறோம்.
தமிழகத்தில் பல சமுகம் நாங்கள் பாண்டியராக ஆண்டோம்,சோழராக ஆண்டோம்,சேரராக ஆண்டோம்,பல்லவராக ஆண்டோம் என கூறுவார்கள்,சமுகமாக இல்லை.ஆனால் முத்தரையராக ஆண்டு முத்தரையராகவே வாழும் ஒரே சமுகம் நம் முத்தரையர் சமுகம் மட்டுமே...
      
நம் இனத்தின் ஒற்றுமை ஓங்கட்டும்...
வாழ்க முத்தரையர் இனம்...



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us