முத்தரையர் வரலாற்றில்....
Dec 05, 2023
| கோநாட்டு முத்தரையர்கள் எனும் கொங்கு சோழர்கள் |
தமிழ் நாட்டில் இருக்கும் பல்வேறு சமுதாயமும் சோழர்கள் தங்களின் குடி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இராஜராஜ சோழனை மட்டுமே உரிமை கொண்டாடி கொண்டு வருகிறார்கள். இராஜராஜ சோழன் மட்டும் வைத்து சோழர் எந்த குடி எனும் முடிவுக்கு நாம் வர முடியுமா? கண்டிப்பாக முடியாது.
சோழர் யார் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நாம் கரிகால சோழன் மற்றும் அதுக்கு முன் காலத்தில் இருந்து பார்க்க வேண்டும்.
மேலும் ரேநாடு சோழர்கள், கொங்கு சோழர் யார் என்று ஆராய வேண்டும்.
கரிகால சோழனின் முன்னோர்கள் கப்பல் பயணம் செய்த வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று சங்க இலக்கிய பாடல் ஒன்று சொல்கிறது.
களப்பிரர் காலத்தில் நெல்லூர், கடப்பா போன்ற பகுதியை ஆட்சி செய்த ரேநாட்டு சோழர்கள் தெளிவாக அவர்கள் முத்தரையர் என்று கல்வெட்டு, செப்பேட்டில் பதிவு செய்து உள்ளார்கள். உதாரணமாக காலமல்லா கல்வெட்டில் நம் ரேநாட்டு சோழன் தனஞ்சயன் முத்தரையர்(கி.பி 575) பற்றி உள்ளது.
மேலும் 11-12 நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆட்சி புரிந்த கொங்கு சோழர்கள் தங்களின் பூர்விகம் கோநாடு என்றே பதிவு செய்து உள்ளார்கள். கோநாடு என்றால் இன்றைய திருமயம், அறந்தாங்கி பகுதிகள் ஆகும். திருமயம் பகுதியில் தான் மிகவும் பழமையான முத்தரையர் கல்வெட்டு கிடைத்து உள்ளது. கோநாட்டை ஆட்சி செய்ர்வர்கள் முத்தரையர்கள் என்பதை நாம் அறிவோம்.
குறிப்பு: ஆக நமக்கு என்ன தெரிய வருகிறது என்றால் கோநாட்டை சேர்ந்த முத்தரையர்கள் தான் பிற்காலத்தில் கொங்கு நாட்டை ஆட்சி செய்கிறார்கள் "கொங்கு சோழர்" என்கிற பட்ட பெயரில்.