|

முத்தரையர் வரலாற்றில் திருமயம்

Dec 08, 2023

முத்தரையர்களின் இரண்டாவது தலைமையிடமாக விளங்கிய திருமெய்யம்!

முத்தரையர் மன்னர் தமிழகத்தில் பெரும்பகுதியை ஆட்சி நடத்தினர்.ஆரம்ப காலங்களில் குறுநில மன்னர்களாக அறியப்பட்ட முத்தரையர்கள் பின் தன் ஆற்றல்மிகு வீரத்தால் பேரரசராக திகழ்ந்தனர்.முத்தரையர் மன்னர்கள் சில நேரங்களில் பல்லவருக்கு நண்பனாகவும்,பல்லவர் அரசுக்கு உட்பட்டும் செயல்பட்டுள்ளனர்.முத்தரையர்கள் வேறு அரசுடன் நட்பாக இருந்தாலோ,உட்பட்டு இருந்தாலோ கலை பணியில், முத்தரையர்களின் கலைகளை வளர்பதில்  'முத்தரையர் பாணி'யில் என்று தனித்து இருந்தனர்.தங்களுக்கென ஒரு கட்டுமானம்,கலை,இசை என உறுவாகினர்.அவ்வாறு முத்தரையர்கள் பாணியில் கோட்டை,கொடி,நாடு,கோவில்,
குடைவரை,ஏரி,கிணறு,என அனைத்திலும் முத்தரையர்களின் பாணியில் தனியான உருவாக்கப்பட்டு ஆட்சியை கட்டி எழுப்பியுள்ளனர்....

முத்தரையர் கோட்டை:
           முத்தரையர்கள் ஆரம்ப காலங்களில்  கங்க நாடு பகுதிகளில் ஆட்சி நடத்த தொடங்கி பின் தமிழ் கொஞ்சி விளையாடும் காவேரி அன்னையின் பாசன பகுதிகளில் ஆட்சி பரப்பை விரிவுபடுத்தினர்.
அதில் தனஞ்சயன் முத்தரையர் பகுதியிலே  அதாவது தஞ்சாவூர் பகுதியிலே முதன்மையாக ஆட்சி நடத்தினர்.முத்தரையர்களின் தலைமை இடமாக  வல்லத்தில்  கோட்டையை எடுப்பித்தனர்.வல்லம் கோட்டையை முத்தரையர்களின் முதன்மை தலைமையிடமாக கொண்டு ஆட்சியை தொடங்கினர்...
தமிழ் வரலாற்றில் போற்றுதலுக்குறிய மன்னர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையருடைய மெய்கீர்த்திகளில் வல்லக்கோன் என்று அதாவது வல்லத்து அரசன் என்று போற்றப்பட்டுள்ளார்.
வல்லம் அகழ்வாராய்ச்சி மூலம் வல்லம் 
கி.பி ஏழாம் நூற்றாண்டு முத்தரையர் அரண்மனை இருந்துள்ளதை உரிதிபடுத்துகிறது...மேலும்
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் தன் ஆற்றல்மிகு வீரத்தால் பாண்டியனையும்,சேரனையும் வெற்றி கொண்டார்.அதன் மூலம் முத்தரையர் நாட்டின் பகுதியை விரிவுபடுத்தினார்.அவ்வாறாக பாண்டியனை வென்று இன்றைய சிவகங்கை மாவட்டமான திருப்பத்தூர் வட்டாரம் வரையிலும்,சேரர்களை வென்று கரூர் பகுதி வரையிலும் 
முத்தரையர் நாடு விரிவுபட்டது...
தோல்வியுற்ற பேரரசு அதன் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டம் தீட்டிக்கொண்டிருப்பர் அல்லவா!!!
வல்லத்தில் இருந்துகொண்டு 
100 கிலோ மீட்டர்க்கு மேல் உள்ள 
தம் நாட்டினை கவணிப்பது என்பது மிகவும் கடினமானது.அதுமட்டுமின்றி 
முத்தரையர் நாடு மையமாகவும் 
மேற்கு திசை சேரர்(போர் நாடு),
தெண் திசை பாண்டியர்(போர் நாடு), 
வடக்கு திசை பல்லவர்(நட்புநாடும்) என அமைந்துள்ளது.இதில் சேரர்,பாண்டியர் இருவரிடம் இருந்து நாட்டைக்காப்பது பெரிதான விசயம்!!!
ஆகையால் எல்லை பகுதிகளை கவணிக்க ஒரு இடம் தேவை.அதே சமயம் அந்த இடம் நகரமாகவும்,உயரமாகவும்,எளிதில் அழிக்கவோ, நெருங்கவோ முடியாத வகையாக இருக்கவேண்டும்.அப்படி  உருவாக்கப்பட்ட இடம்தான் திருமயம்...ஆகையால் முத்தரையர்களின்  இரண்டாவது தலைமையிடமாக திருமெய்யத்தை தேர்த்தெடுத்துள்ளனர்.
திருமெய்யத்தில் இரண்டாவது தலைமையிடமாக கொண்டு பாண்டிய நாடு,சேர நாடு  எல்லைகளை கவணித்துக்கொண்டனர்.
இரண்டாவது தலைமையிடமான திருமெய்த்தை மையமாக கொண்டு
முத்தரையர் மன்னர்களில் சாத்தன் என்ற பெயர் கொண்ட மரபினரே இன்றைய புதுக்கோட்டை பகுதியை அதிகளவில் ஆட்சி நடத்துள்ளனர்.இப்பகுதியில் மக்களுக்கு நேரடியாக நல்லாட்சியை கொடுத்துள்ளனர்.
மேலும் கோவில்களும்,குடைவரைகளும்,
கிராம பெயர்களும்,கல்வெட்டு,செப்புபட்டயம் போன்ற பல சான்றுகள் முத்தரையர்களை போற்றிபுகழ்கின்றது...

திருமயம் கோட்டை;
             திருமயத்தில் முத்தரையர்கள் கோட்டை இருந்துள்ளதா? என்ற நிலையில்தான் தற்போது உள்ளது.காரணம் திருமயத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முதலாவதாக ஆட்சி நடத்தியவர்கள் முத்தரையர்கள்.அதற்க்கு அடுத்தபடியாக பாண்டியர்,நாயக்கர்,சேதுபதி,தொண்டைமான் உள்ளிட்ட பல மன்னர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர்.அப்படி என்றால் பலருடை ஆட்சி மாற்றத்துக்கேற்ப அரண்மனைகளும் மாறுபடும் அல்லவா!!!இதில் அரண்மனையாக இருந்தால் அதை எளிதில் அழித்துவிடமுடியும்.ஆனால் 
குன்றுகளால் ஆன கோட்டையை எளிதில் அழித்துவிடமுடியாது.
ஒரு மன்னர் எடுப்பித்தவற்றை பின்வந்தவர்கள் கண்டுகொள்ளாமல் விடவேண்டும் அல்லது அதை மேலும் தங்கள் ஆட்சிக்கேற்ப எடுப்பித்து நடைமுறைபடுத்த வேண்டும் இதுதான் இயல்பு!!!
திருமயம் நல்ல நகரம் அதே சமயம் குன்றால் ஆனவை குறைந்த பச்சம் 30கிலோமிட்டர்க்கு மேல் பரப்பினை பார்க்கமுடியும்,எதிரி நாட்டு படையெடுப்பை நன்கு அறியமுடியும்.
இதன்மூலம் முன் எச்சரிக்கை செய்ய ஏதுவான இடமாக திருமயம் கோட்டை விளங்கியது.ஆகையாலே திருமயம் கோட்டை முக்கியம் வாந்தவையாக கருதி முத்தரையர்களும்,பின்வந்த பல மன்னர்களும் அவர்கள் ஆட்சிக்கேற்ப கோட்டையை எடுப்பித்து அதை பயன்படுத்தி வந்துள்ளனர்.மேலும்
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் 1816 ஆம் ஆண்டு புள்ளி விவர ஏடு எண் 1497ல் 
""ஸ்ரீ விஜய ரகுநாத சேதுபதி ராஜா"" முத்தரையர்களின் குடைவரை கோவில்களையும் சுற்றிமேற் கல்கோட்டை சுற்றுசுவர் 1687ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறுகிறது...இதில் தனித்து இருந்த முத்தரையர்களின் கோட்டை பகுதிகளையும் இணைத்து ஒன்றாக சேர்த்து சுற்றுசுவர் எடுப்பித்திருக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்...

திருமெய்யதை மையமாக கொண்டு ஆண்ட முத்தரையர் சாத்தன் மரபினர்;         
           *விடேல் விடுகு சாத்தன் மாறன்
           *குவாவன் சாத்தன் விடேல் விடுகு
           *சாத்தன் பூதி இளங்கோவதியரையர்
           *பூதி களரி அமரூன்றி முத்தரையர்
           *சாத்தன் காளி
           *சாத்தன் பழியிலி
           *பழியிலி சிறிய நங்கை
           *பூதி அரிந்தகை சாத்தன் மாறன்
           *மல்லன் விதுமன் தென்னவன்  
             தமிழதிரையன்
          *தென்னவன் இளங்கோவரையன்
இதுபோன்ற பல மன்னர்கள் ஆட்சிப் புரிந்துள்ளனர்.இதனை கல்வெட்டுக்கள்,
கோவில்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும்
முத்தரையர்கள் மட்டும் வேளீர்கள் மண உறவு தொடர்ப்பு மரபினரும் இப்பகுதிகளை ஆட்சி நடத்தியுள்ளனர்...

முத்தரையர் அரசர்களில் சாத்தன் மரபினர்  தொடர்புடைய இன்றைய ஊர்கள்:
            திருமயம்,நாத்தாமலை,
பூவாளைக்குடி,மலையடிப்பட்டிசெம்பூதி,
பொன்னமராவதி,ஆலவயல்,கண்டியாநத்தம்,ஏனாதி,வேந்தம்பட்டி,கொள்ளுப்பட்டி,
மேலதாணியம்,கீழத்தாணிம்,சாத்தணூர்,
நல்லூர்,விராலூர்,மலையடிப்பட்டி,
பூலாங்குறிச்சி,திருவப்பூர்,
குண்றன்டார்கோவில்,குடுமியான்மலை,
வையாபுரி,தேணிமலை,சாத்தன்மங்களம்,கொடும்பாளூர்,மணப்பாரை(வட்டம்) இவ்வூர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பகுதிகளை ஆட்சி நடத்தியுள்ளனர்...
இவ்வூர்களின் அதிக ஊர்களில் சாத்தன்,சாத்தகருப்பர்,பூதியம்மன்,
சாத்தன் அய்யனார்,
பெரிய சாத்த கருப்பர்,
சின்ன சாத்தகருப்பர்,சாத்தம்மை,
சாத்தன்முத்தரி போன்ற சாத்தன் என்ற பெயர்களில் முத்தரையர் சமுகத்தினர் ஏராலமான குல தெய்வ வழிப்பாட்டை கொண்டுள்ளனர்.அதுமட்டுமல்லாது முத்தரையர் சமுக மக்கள் சாத்தன் சார்ந்த
 குல பட்டங்களையும் கொண்டுள்ளனர்...



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us