|

தெய்வதிரு நீச்சல்_காளிஅம்பலம் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவேந்தல்

Nov 03, 2021

தெய்வதிரு #நீச்சல்_காளிஅம்பலம் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவேந்தல்...

வலையர்களின் தாய் தான் கடல், வலையர்களின் பிள்ளை தான் எங்கள் கடல் என்று நம்பி கொண்டு இருந்த மக்களுக்கு 1964 ம் ஆண்டு டிசம்பர் 22 நாள் அன்று தன்னுடைய தாயும் கோவம் கொள்வாள் என்று நிருபித்து காட்டியது இந்த கடல் தாய். 
தன்னுடைய தாய் என்று நம்பி இருந்த எங்களை பெற்ற தாயிடம் இருந்து பிரித்தது! இந்த கடல்! 
பிள்ளை என்று நம்பி இருந்த எங்களை பெற்ற பிள்ளையிடம் இருந்து பிரித்தது! இந்த கடல்! 
அரனாக இருந்த வீடுகளையும், உடமைகளையும் சூறாடி கொண்டது இந்த கடல்! 

அப்படிபட்ட இந்த கொடூர சம்பவம் நிகழ்த்திய அந்த தாயிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தன் உயிரும் துச்சமென நினைத்து கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த ஒரு சில பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றி கரையில் சேர்த்தவர் தான் நீச்சல் காளி அம்பலம். 

கொடூர சம்பவத்தில் தப்பிய மக்கள் அனைவரும் இராமேஸ்வரம் பகுதியில் வசிப்பதற்கு அரசாங்கம் வழிவகுத்தது.மற்றும் தனுஷ்கோடியே மக்கள் வாழ தகுதியற்ற பகுதி என்று அரசாங்கம் தெரிவித்த நிலையில் அங்கு யாரும் வசிக்க முடியவில்லை. 
இருந்தாலும் என் முன்னோர்கள் பிறந்த இடம் தனுஷ்கோடி அந்த இடத்தில் தான் வாழனும் என்று வாழ தகுதியற்ற அந்த பகுதியில் (தனுஷ்கோடி)தன்னுடைய முதல் கால் தடத்தை பதித்தவர் தெய்வதிரு.காளி அம்பலம். 
அடித்தாலும் அரவணைப்பது எங்கள் தாய்(கடல்) தான் என்று இராமேஸ்வரம் பகுதிக்கு சென்ற மக்கள் தனுஷ்கோடிக்கு திரும்பி வந்து தங்களுக்கென்று இருப்பிடத்தை அமைத்து கொண்டனர். 
 வாழ தகுதியற்ற பகுதியில் வாழ்ந்து காட்டிய தெய்வதிரு. காளி அம்பலம் 10ம் ஆண்டு நினைவு நாளில் அவருடைய தெய்வபக்தி, இரக்க குணம், வீர செயல்களை போற்றி வணங்குகிறேன். 

 தமிழக அரசால் தனுஷ்கோடியில் ஐயா காளி அம்பலம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து அவருடைய வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 
நம் சமுதாய சார்ந்த தலைவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

என்னடா இந்த ஒரு செயலை செய்ததற்காக மணிமண்டபமா? என்று கேட்க தோனும். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை தெரிந்துகொள்ள தனுஷ்கோடிக்கு சென்று வாருங்கள் அப்போது சொல்வீர்கள் ஐயாவை பற்றி. 

ஏன்? வாழ தகுதியற்ற தனுஷ்கோடியவே இப்போது சென்று பாருங்கள்,  பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. அதற்கு காரணம்?ஐயா காளி அம்பலம் தான். 

அங்கு வாழ்கின்ற 300 குடும்பமும் வலையர் மக்கள் தான், இன்றும் அதே பாராம்பரிய மீன்பிடித்தல் தொழிலையும், ஒரு சிலர் கடைகள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். 
அவர்கள் ஒவ்வொரு பேரும் நீச்சல் காளி அம்பலம் அவரின் பெயரை உச்சரிக்காமல் இருப்பதில்லை. 
வீட்டிற்கு ஒருவருக்கு காளி என்று பெயர் எப்படியும் வைத்து விடுவார்கள். 

வலையர் இனத்தில் பிறந்ததால் என்னவோ  ஐயாவை பற்றி வேறு தமிழ் சமூகத்திற்கு தெரியவில்லை. 

அடித்து கொண்டு இருக்கும் அலைகளும் நிற்க போவதில்லை!  
#வலையனோ மீன் பிடிப்பதை நிறுத்த போவதும் இல்லை!  
தனுஷ்கோடியில் உங்களுக்கு மணிமண்டபம் அமைக்காமல் விட போவதும் இல்லை...

நினைவேந்தலுடன்:-
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி????????????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us