மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் பவுர்ணமி விழா
Mar 19, 2024
25-01-2024 வியாழக் கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம்,
திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் திருநியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி அம்மன் ஆலயத்தில் தைப்பூச விழா மற்றும் பவுர்ணமி வழிபாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
காளா பிடாரி ,கோட்டை முனியாண்டவர்,சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பேரரசர் சுவரன்மாறன் சிலைக்கு ஒன்பது விதமான அபிசேகங்கள் செய்யப்பட்டது. உலக சேமத்திற்க்காக சிறப்பு யாகம் நடைபெற்றது.
அது சமயம் திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகரன் அவர்களின் திருக்கரங்களினால் நேமம் காளா பிடாரி திடலில் கருங்காலி மரக்கன்றும் வழக்கறிஞர் lr கார்த்திக்பாபு வாகை மரக்கன்றுகளையும் நட்டார். பூதலூர் ஒன்றிய சேர்மன் திரு செல்லக்கண்ணு அவர்கள் கருங்காலி மரக்கன்றுகள் நட்டார். இவ்விழாவில் திமுக கிளைச்செயலாளர் நாகராஜ், கிராமத்தலைவர் கோவிந்தராஜன், கவுன்சிலர் செந்தில்குமார் , அறிவுடைநம்பி, மன்னர் மன்னன், நேமம் சந்திரசேகர், சிவக்குமார்,நேமம் தமிழ்வாணன், தஞ்சாவூர் வீரையன், முத்தரையர் அரசியல் களம் கே.பி.எம் ராஜா ,அகரப்பேட்டை செல்வராஜ் ,பெல் கிருஸ்ணமூர்த்தி , குளித்தலை பன்னீர்செல்வம், வளப்பக்குடி மணி, லால்குடி ராமமூர்த்தி மற்றும் திமுக முன்னோடிகள்,நேமம் கிராம மக்கள் , பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜோதி, டாக்டர் பன்னீர்செல்வம், தர்மராஜ், பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.