நீர் மேலாண்மையில் முத்தரையர்
Apr 15, 2024
மார்பிடுகு ஏரி பற்றி பாற்பதற்கு முன்பு மார்பிடுகு என்கிற பேரடியரையன் எனும் இரண்டாம் குவாவன் முத்தரையர் பற்றி அறிந்து கொள்ள அவசியம் (கி.பி.770-கி.பி.791)
இவர் விடேல்விடுகு விழுப்பேரதி அரையர் என்ற சாத்தன் மாறன் முத்தரையர்க்கு அடுத்து அரியனை ஏரியவர் இவர் கல்வெட்டுகள் காண்போம் 👇
தந்திவர்ம பல்லவன் 5வது காலத்தில் மார்பிடு பேரதியரையரின் அடியான் வாலி வடுகன் என்ற கலிமூர்க்க இளவரையன், குண்றான்டார் கோயில் பின் உள்ள ஒரு ஏரியை வெட்டி வாலி ஏரி என பெயரிட்டுள்ளார்
திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் உள்ள ஸ்வஸ்திக் கிணறு
"மார்பிடுகு கிணறு " என்று அழைக்கப்பட்டதாக அதில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஸ்வஸ்திக் கிணறு பல்லவ மன்னனான தந்தி வர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது என்றும் இதன் மார்பிடுகு பெருங்கினறு என்று கல்வெட்டு கூறுகிறது
மற்றும் இவர் வெளியிட்ட மற்றோரு கல்வெட்டு பொன்விளைந்தான் பட்டியில் கிடைத்துள்ளது . இவன் மனைவியின் பெயர் மாந்தூர்த்தடிகள் இக்கல்வெட்டில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்த ஜைனப் பள்ளிக்கு தானம் கொடுத்ததையே குறிப்பிடப்படுகிறது .
பிள்ளை. கே.கே. எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் புத்தகத்தில் - ஆலம்பாக்கத்தில்" மார்ப்பிடுகு ஏரி " யைக் கட்டினவனும் , திருவெள்ளறையில் மார்ப்பிடுகு பெருங்கிணறு தோண்டியவனும் மாற்பிடுகு பேரடியரையன் இவனேயாவான் என்று எழுதி உள்ளார்
மாற்பிடுகு என்று பெயர் இரண்டாம் குவாவன் முத்தரையர் எனும் மாற்பிடுகு பேரடியரையனையே குறிப்பிடுவதன் மூலம் ஆலம்பாக்கத்தில் உள்ள" மார்ப்பிடுகு ஏரி " யை கட்டியவர் இவரே என்று உறுதியாகிறது இந்த மார்ப்பிடுகு ஏரி தற்போது இருந்ததற்கான சில எச்சங்கள் மட்டுமே உள்ளன
மார்பிடுகு என்கிற பேரடியரையன் எனும் இரண்டாம் குவாவன் முத்தரையர் நீர் மேலாண்மை யில் சிறந்து விளங்கிஉள்ளார் இதனை இவர் ஏற்படுத்திய குண்றான்டார் கோயில் பின் உள்ள வாலி ஏரி , திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு, மார்பிடுகு ஏரி போன்றவை உதாரணமாக உள்ளன
மார்பிடுகு என்கிற பேரடியரையனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் இவர் மகன் விடேல்விடுகு முத்தரையர் எனும் குவாவன் சாத்தன் இவரும் ஒரு புகழ்பெற்ற மன்னர்