|

குலமா.....சாதியா....விளக்கம்

Apr 24, 2024

குலமா சாதியா ​
----

குலம்-Clan வேறு சாதி-Caste வேறு 

"குலம்" என்பது பிறப்பினடிப்படையில் வருவது அல்ல, அது சாதி அல்ல. சாதி  என்பது "ஜாதி" என்ற சொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவம். `ஜா` (ஜனனம்) என்பது பிறப்பினைக் குறிக்கும். அந்தச் சாதியே பிறப்பினடிப்படையிலானது, சாதி ஆரிய வழக்கமாகும். தமிழில் உள்ள `குலம்` என்பது பிறப்பினடிப் படையிலானதல்ல, இதோ பின்வரும் நாலடியார் பாடலினைக் காண்க.👇 

"நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்".  
{நாலடியார் : 195}

பொருள் - நல்ல குலம், தீய குலம் என்று சொல்வதெல்லாம் பெயர் அளவில்தான். அப்படியொரு பாகுபாடு பொருள் அளவில் இல்லை. 
இதற்குத் தொன்மையான சிறப்புடைய பொருள் ஒன்று உண்டு. 

கல்வி, தவம்,  ஆள்வினை (முயற்சி) என்னும் இந்த அடிப்படையில் அந்தக் குலப் பாகுபாடு அமையும்.

👆 இப்போது இந்தப் பாடலுக்கான விளக்கம் சரியாக விளங்கும் என எண்ணுகின்றேன்.👇

"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு _ மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்".
: மூதுரை, (இடைக்கால) ஔவையார்.

👆இதனையே சுருக்கமாக "குலத்தளவே ஆகுமாம் குணம்" எனச் சொல்வர். இப்பாடலின் பொருள் நீர் மட்டளவுக்கே  ஆம்பல்  வளரும். அதே போன்றே கல்வி + முயற்சி+  ஒழுக்கம் என்பனவற்றுக்கமையவே ஒருவருடைய குணம் அமையும்  என்பதாகும் {பிறப்பு அடிப்படையிலான சாதிக்கமைய குணம் அமையும்  என இதனைப் பிழையாக விளங்கிக் கொள்ளாதீர்கள்}



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us