|

ஆழ்வார் பாயிரம்

Apr 29, 2024

நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறு  திருமங்கையாழ்வார் காலத்திற்குப்பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டு விட்டார்கள். இவ்வுலகில் 4000 ஆண்டுகள் ஆழ்வார்கள் பாசுரங்கள் வழக்கொழிந்து போயின.    4000 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டு மன்னார்கோயில் என்றழைக்கப்படும் காட்டுமன்னார்குடியில் நாதமுனிகள் என்னும் வைணவர் அவதரித்தார்.  அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்திகொண்டு அப்பெருமானுக்கான கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவந்தார்.   அவர் ஓர்நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலுக்குச்சென்று மூலவர் ஆராவமுதப் பெருமாளை சேவித்துக் கொண்டிருந்தார்.  அப்போது தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்   *ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*  *நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே*  *சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை*  *ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.*  எனத் துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் மீது அருளிச்செய்த பாசுரங்கள் பதினொன்றையும் இனிய இசையில்பாடி வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவ்வடியார்கள் பாடிய *உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*  *கழல்கள் அவையேச் சரணாக்கொண்ட குருகூர்ச் சடகோபன்*  *குழலின் மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்*  *மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே.*  என்னும் 11 ஆம் பாசுரம் நாதமுனிகளின் கவனத்தை ஈர்த்தது.     அவர் அவ்வடியார்களிடத்தில் "ஓராயிரத்துள் இப்பத்தும்" என்றால் "இதுபோன்ற இனிய பாசுரங்கள் ஆயிரம் உள்ளனவோ? அவற்றை நீவிர் அறிவீரோ?" என வினவினார்.  அதற்கு அவ்வடியார்கள் "சுவாமி இப்பதினோறு பாசுரங்களே யாம் அறிவோம். "இவை நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள்.  நாங்கள் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் மரபில் வந்தவர்கள். எங்கள் பரம்பரையில் இப்பதினோறு பாசுரங்கள் மட்டுமே செவிவழியாக  போதிக்கப் பட்டு வருகின்றன. இதனை எங்களுக்குக் கற்பித்த பராங்குசதாசர் என்பவர் தற்போது திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்து வருகிறார். அவரை தாங்கள் அணுகினா


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us