செம்பியன் மாதேவியார் திருவடி போற்றி
Apr 30, 2024
#சித்திரை மாதம் #கேட்டை நட்சத்திரம் அன்று உதித்த சோழ குலத்தின் உடையபிராட்டி #செம்பியன்_மாதேவியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை சமயப் பணிக்காவே அர்பணித்து சோழர் வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தை பிடித்து பெருவாழ்வு வாழ்ந்தவர். இவர் கற்றளிகளாக மாற்றிய ஆலயங்கள் ஏராளம். அவை #செம்பியன்மாதேவி_கலைப்பாணி என கலை வல்லோர்களால் இன்றளவும் போற்றப்படுகின்றன.
ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றளவும் #சோழ நாட்டின் மக்களால் வணங்கப்பட்டு வரும் செம்பியன்மாதேவி உதித்த தினம் இன்று (27/4/2024). #கண்டராதித்த சோழரின் மாதேவியாரும், #உத்தம_சோழரை திருவயிறு வாய்த்த உடையபிராட்டியுமான செம்பியன்மாதேவியார் அவர்களால் #கற்றளியாக மாற்றப்பட்ட ஆலயங்களுக்கு செல்லும் போது, அவர் செய்த திருப்பணியை நினைத்து அவரை போற்றி வணங்கிடுவோம்..!!