செம்பியன் மாதேவி அடிகளின் திருத்தொண்டு
Apr 30, 2024
#அகத்தியமாமுனிகள் வழிபட்ட கோடிகா உடையவரும்;
#பெரியபிராட்டியாரின் அருட்கொடையும்..!
🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸
சோழர்குல சிவஞானச் செல்வம் பெரிய பிராட்டி #செம்பியன் #மாதேவியார்.
இவரது காலம் கி.பி.910 - 1001.
(சற்றேறக்குறைய 90 ஆண்டுகள்)
தம்முடைய வாழ்நாளில் 6 அரசர்கள் சோழ அரியணையில் அமரக் கண்டவர்.
சோழர்குடிகளால் அம்பிகையின் வடிவாக மதிக்கப்பெற்ற இவர்
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிவப்பணியிலேயே கழித்த மாதேவி. #சிவஞானக் #கண்டராதித்த #சோழரின் பட்டத்தரசி.
சோழ மன்னர்களின் சிவத்திருப்பணிகளுக்கு வித்திட்டவர் .
சிவபாத சேகரரான மாமன்னர் ராஜராஜரின் சிவப்பணிகளுக்கு தூண்டுகோலாக அமைந்தவர்.
அம்மையின் அருட்தொண்டினால் நிவந்தங்கள் பெற்று கற்றளியாகப் பொலிந்த ஆலயங்கள் ஏராளம்.
பெரிய பிராட்டி திருப்பணி செய்த இப்பகுதி ஆலயங்கள் பலவற்றிலும் அகத்திய மாமுனியின் கற்றிருமேனி விளங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
#அகத்தியர் பெருமான் தன் மனைவி #லோபாமுத்திரையுடன் வழிபட்ட ஸ்தலங்கள் இவை என்பது பற்றிய புராணக்குறிப்புகள் உள்ளன . சோழ மண்டலத்தில் இப்பகுதியில்
***பல ஆலயங்களில் கோஷ்டங்களுள் ஸ்தல #விநாயகர், #அகத்தியர், #நடராஜர் என்ற வரிசையில் திருமேனிகள் வரிசைப் படுத்தப் பெற்றிருப்பதைக் காண்கின்றோம்.
சரித்திரவியலாளர்கள் இத்தகு அமைப்பினை '#செம்பியன் #மாதேவி #பாணி' என்று குறிப்பிடுகின்றார்கள். இத்தகு அமைப்பினைக் கொண்டு அம்மையின் திருப்பணிக்கு உட்பட்ட ஆலயம் என்பதனையும்; ஆலயத்தின் தொன்மையையும் சாதாரணர்கள் கூட கணித்து விட இயலும்.
அகத்திய மாமுனிவரவர்களை செம்பியன் மாதேவி பிராட்டியார் தம் குருநாதராகக் கொண்டு வழிபட்டார் என்கிற செய்திக்கு உதாரணமாக விளங்குகின்ற
அமைப்பாக இதனைக் கருதலாம்.
தொன்மையான செங்கற்றளிகளை (செங்கல் + தளிகள்) கற்றளிகளாக மாற்றி திருப்பணி செய்த பெரியபிராட்டியின் முதல் திருப்பணி நிகழ்ந்த ஆலயம் கோடிகா என்று கூறுகின்றனர். அது மட்டுமா..?
கோடிகா ஆலயத்தினை கற்றளியாக்கும்போது, ஆங்காங்கு சிதறுண்டு கிடந்த கல்வெட்டுகளை ஒருங்கே சேர்த்து பதிக்கச் செய்திருக்கிறார். இக்கல்வெட்டுப் பலகைகளே நமக்கெல்லாம் அன்றைய வரலாறு தெரிவதற்கான மூலமாக விளங்குகிறது. அன்று அந்த அன்னை தொலைநோக்குப் பார்வையுடன் செய்த விஷயம் இன்றளவும் பேசப்படுகிறது.
கோடிகா ஆலயத்தின் பிரதான கோஷ்டத்தில் ராஜ விநாயகர், அகத்திய பெருமான் உடன் கல்திருமேனியராய் சிவகாம சுந்தரி உடனாய நடராஜப் பெருமானையும் தரிசிக்கின்றோம்.
தவிர, அகத்திய முனிவர் பூஜித்த லிங்கத்திருமேனி ஒன்றும் '#அகஸ்தீஸ்வரர்' என்ற திருப்பெயரிலேயே ஆலயத்து வெளிச்சுற்றில் நிலைப்படுத்தப்பெற்றுள்ளது.
இச்சந்நிதியிலும் சிறியதோர் அகத்தியமுனிவரின் சிலாரூபம் அஞ்சலி பாவனையில் உண்டு.
சற்றே உட்புறமாகக் கூர்ந்து கவனித்தால் இப்பெருமானைத் தரிசிக்கலாம்.
சிவ ராஜதானியாகிய திருவாவடுதுறையில் தங்கியிருந்து தினந்தோறும் திரு கோடிகா ஈசரை தம் மனைவி லோபாமுத்திரையுடன் அகத்திய மாமுனிவர் வழிபட்டு வந்துள்ளார் என்பதும்;
இதன் காரணமாக தமக்கு வந்த வெண்குட்ட நோய் தீரப்பெற்றார் என்பதும் புராண வரலாறு.
குருவருள் அன்றி திருவருள் ஏது..?!
Suja Sujatha
Thirukodika.
குருவே சரணம்
🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸
(Photos - kodika temple).
***செம்பியன்மாதேவியார் பாணி கோஷ்ட சிற்பங்கள் - இன்னும் சில தலங்கள்;
#திருகோடிகா, #திருவாவடுதுறை, #ஆடுதுறை (கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடம்),
#திருவேள்விக்குடி, #திருத்துருத்தி, #திருக்கோழம்பம், #திருநல்லம் #திருச்சத்திமுற்றம் ......இன்னும் சில.
#திருநல்லகூகூர் தலத்தில் இதே பாணி வரிசை உள்ளது. ஆனால் முனிவர் திருமேனியை மட்டும் தூர்வாச முனிவர் என்று குறிப்பிடுகின்றனர்.