விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கNov 06, 2021
06-11-2021 அன்று காலை 11 மணிக்கு நியமம் / நேமம் ,திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அன்னை மாகாளத்து காளா பிடாரி அம்மன் ஆலயத்தை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக மீண்டும் கட்டப்பட்டு வருகிறது.
மாண்புமிகு அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் அவர்கள் அன்னை காளா பிடாரி கோயில் தல விருட்சத்தை இன்று நட்டார்.
திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் திரு.துரை .சந்திரசேகரன், அரசு வேம்பு மரக்கன்றினை கோயில் வளாகத்தில் நட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன் பிடாரி அறக்கட்டளை சார்பாக செயலாளர் முனைவர் பேராசிரியர் சந்திரசேகரன், துணை செயலாளர் சங்கரன் தங்கதுரை, மற்றும் பொறுப்பாளர்கள் விரிவான ஏற்பாடு செய்து இருந்தனர். நேமம் ஊராட்சி தலைவர் கோவிந்தராசன், பூதலூர் திமுக ஒன்றிய செயலாளர் செல்லக்கண்ணு மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.????????????????????