ஆளப்பிறந்த முத்தரையர்களே
May 02, 2024
| பராந்தக சோழன் படை தளபதி மாறன் பரமேஸ்வரன் |
வரலாறு இராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திர சோழன் புகழை மட்டுமே சோழர் வரலாற்றில் பேசும். மற்ற சோழர்களின் வரலாற்றையும் அவர்கள் செய்து சாதனைகளை மறைத்து விடுகிறது.
அதில் நம் முத்தரையர் பட்டத்து சோழர்கள் வரலாறும் ஒன்று. உதாரணமாக கொங்கு சோழர்கள் கோநாட்டு பகுதியை சேர்ந்த முத்தரையர்கள் என்பது பலருக்கு இன்றும் தெரியாது.
பராந்தக சோழன் தன் சோழ நாட்டை விரிவு செய்தார். அவருக்கு கடைசி வரைக்கும் துணையாக இருந்தவர் அவரின் படைத்தளபதி மாறன் பரமேஸ்வரன் எனும் செம்பிய சோழியவரையன். பராந்தக தன் சோழன் நாட்டை விரிவு செய்தார் என்பதை விட மாறன் பரமேஸ்வரன் தான் தன் அரசனுகாக சோழ நாட்டை விரிவு செய்தார். இவர் சாளுக்கிய மன்னனை போரில் வென்று, அவனின் சிட்புள்ளி நாடு, நெல்லூர் நாட்டை பிடித்தார்.
நம் புகழ் பெற்ற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தந்தை பெயரும் மாறன் பரமேஸ்வரன். அதேபோலவே பராந்தக சோழன் படை தளபதி பெயரும் மாறன் பரமேஸ்வரனே ஆகும்.
குறிப்பு: ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முத்தரையர் மக்கள் மாறன் பரமேஸ்வரன் போன்ற மன்னர்களை அடையாளம் செய்து கொண்டாட வேண்டும்.