|

தமிழக நிர்வாகவியலில் பட்டையதாரர்

May 05, 2024

"பட்டயத்தார்" 

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் "முத்துராஜ குல முத்தரையர்" சமூகத்தவர்களில் பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும் கிராமங்களையும் அக்கிராமம் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் பல குடி மக்களையும் நிர்வாகிக்கும் ஓர் சிறிய ஜெமீன் அல்லது பாளையங்காரர்களை போன்றவர்களே இந்த "பட்டயத்தார்கள்" ஆவார்கள்.

பட்டயத்தார் என்பது நிர்வாகப்
பொறுப்பு மன்னர் ஆட்சி கால கட்டத்தில் மன்னர்களால் நியமிக்கப்பட்டவர்களே பட்டயத்தார் ஆவார்கள் மற்றும் பட்டயத்தார் என்பதும் பட்டக்காரர் என்பதும் ஒரே அர்தத்தைக் குறிக்கும். 

இது கொங்கு பகுதிகளில் உள்ள பட்டக்காரர் முறையை ஒத்தே இருக்கும். மன்னர் ஆட்சி கால கட்டத்தில் அரசனின் உத்தரவுகளை
நடைமுறைப்படுத்துவது, வரிவசூல்,
தானிய விதைநெல் இருப்பு,
நீராதாரம்,
எல்லை பாதுகாவல் போன்றவற்றை நிர்வகிப்பது பட்டயத்தார்களின்
கடமைகள் ஆகும். ஒரு பகுதியின் பட்டயத்தார்
என்றால் அவர் அப்பகுதியின் எல்லா
மக்களுக்குமே தலைவர் ஆவார். அப்பகுதியின் அரச
பிரதிநிதி போல ஒழுக்கம்,தர்மம்
தவறும் பட்சத்திலோ, மன்னர் பார்த்து
மாற்றும் வரையில் பரம்பரை
பரம்பரையாக பதவி சென்று
கொண்டிருக்கும். இப்பதவியானது திருச்சி மாவட்டத்தில் "முத்துராஜா குல முத்தரையர்களுக்கு" மட்டுமே உண்டான அதிகார பதவியாகும். 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பட்டயத்தார் நிர்வாக முறையானது குறைந்தபட்சம் ஒரு கிராமத்தில் தொடங்கி அதிகபட்சமாக பத்திற்க்கும் மேற்பட்ட கிராமங்களையும் ஒருங்கினைத்த பகுதிக்கு ஒரு குடும்பம் பட்டயத்தாராக இருப்பர்.

பட்டயத்தார் முறை மட்டும் இன்றி திருச்சி மாவட்டத்தில் நாட்டு அம்பலக்காரர் முறையும் முன்பு இருந்துள்ளது. அந்த முறை தற்போது இல்லை.

முன்பு காலங்களில் முத்தரையர் சமூகத்திற்குள்
பெரிய நாட்டு சபையும் இருந்துள்ளது இந்த நாட்டு சபையில் ஒவ்வொரு பகுதி பட்டயத்தார் மற்றும் ஊர் அம்பலக்காரர்கள் செல்வார்கள்
அவ்வாறு கூடும் சபையை "நாட்டு அம்பலக்காரர்" முன்னின்று நடத்துவர்.

ஒவ்வொரு கிராமங்களையும் நிர்வாகிப்பவர் ஊர் அம்பலக்காரர் ஆவார் அதற்க்கு அடுத்த நிலையில் ஒரு குறிப்பிட எண்ணிக்கையில் இருக்கும் பல கிராமங்களில் நிர்வாகிப்பவர் பட்டயத்தார் ஆவார் மற்றும் இவர்களுக்கு எல்லாம் தலைமையாக நாட்டு அம்பலக்காரர் செயல்படுவார்.

(இதுபற்றி கேஜட்டிலும்
குறிப்புண்டு).

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முத்தரையர் வசிக்கும் கிராமங்களில் நடக்கும் விழாக்களில் ஓர் அமைச்சரே வந்தாலும் கிடைக்காத மரியாதை அப்பகுதி "பட்டயத்தார்" வந்தால் கிடைக்கும் என்று நம்மவர்கள் என்னிடம் கூறினர்.
🙏 உதாரணத்திற்கு கச்சமங்கலம் அண்னாமலை முத்துராஜா பட்டையதாரர்,சுந்தர்ராஜன் முத்துராஜா பட்டையதாரர்,மான்பிடிமங்கலம் லேட் புங்கான் முத்துராஜா பட்டையதாரர்..... என காவிரியின் இரு கரைகளிலும் கிராம நிர்வாகம்,கோயில் திருவிழா மற்றும் குடும்ப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவது முத்துராஜா குல பட்டையதாரர்களே.....🙏
வாழ்க பட்டையதாரர்கள் புகழ்
💥💥💥💥💥💥💥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us