சத்திரிய குல முத்தரையர்களே....
May 05, 2024
முத்தரையர்கள் சத்திரியர்களா ?
புகழேந்திப்புலவர் இயற்றிய அல்லியரசாணிமாலை புத்தகத்தில் " முத்திரியர் சத்திரியர் சத்திரியர் முத்திரியர் " என்று குறிப்பிட பட்டுள்ளது
மேலும் ஆவணம் இதழ் 22 பக்கம் 132 ல் உள்ள முத்தரையர் செப்பேடில் " சத்திரியர் முத்திரியர் " என்று கூறுகிறது
இந்த இரண்டிற்கும் வழுசோர்க்கும் வகையில்
சாதியும் நானும் என்ற புத்தகத்தில் - 1909 ஆகஸ்ட் 10ஆம் நாள் திருச்சிராப்பள்ளி தாலுகா மீனாட்சிபுரத்திலுள்ள " தாத முத்திரியன் மகன் நல்லகுட்டி முத்திரியன் " எழுதித் தந்த ஈட்டுக்கடன் பத்திரத்தில் " சத்திரியச் சாதி" என்று பதியாததற்காக சப்ரிஜிஸ்தர் வி.ஆர். ராதாகிருஷ்ண அய்யர்மீது டிஸ்திரிகட் ரிஜிஸ்டர் ஜான் ஐசக் தேவரிடமும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்மித் துரையிடமும் புகார் மனு செய்தார் என்று புத்தகத்தில் குறிப்பிட பட்டுள்ளது
Reference :
சாதியும் நானும் - பதிப்பாசிரியர் பெருமாள்முருகன்
அல்லியரசான்மாலை - 1929
ஆவணம் இதழ் 22 பக்கம் 132