|

மீண்டும் மலர்கிறது முத்தரையர் பேரரசு

May 09, 2024

*தமிழக வரலாற்றில் முத்தரையர் நாடு*
🙏🙏🙏🙏🙏🙏🙏
முத்தரையர் நாட்டின் ராஜ குல மாதா திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி துணை ....!
🙏
முத்தரையர் நாடு பற்றி குறிப்பிடும் முதல் கல்வெட்டு 
💥
*உத்தரமல்லூர், காஞ்சிபுரம் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் வைகுண்டப் பெருமான் கோயிலின் கிழக்குச் சுவரில் உள்ள பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் 26 ஆம் ஆட்சி கல்வெட்டு "முத்தரையர் நாடு " என்று ஒரு தனி நாடு இருந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது* 

கல்வெட்டு தகவல்:

*காளியூர்க் கோட்டத்தின்  உத்தரமேரு சதுர்வேதிமங்கலத்தின்  ஆடலாம் பூண்டிக்கு தெற்கே உள்ள கீழ்ப்பூண்டியில் அமைந்துள்ள நிலங்களை , முத்தரையர் நாட்டின் மீகூற்று  விளாநாட்டு கூகூர்  விசயநல்லுழான் காடவதிராயன் எனும் பூதி தீரனுக்கு என்பவருக்கு நிலம் விற்கபட்டுள்ளது* 
🔥
*விசயநல்லுழான் யார் கொஞ்சம் காலத்தில் பின் சொல்ல வேண்டும் திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் உள்ள ஸ்வஸ்திக் கிணறு கல்வெட்டு ஒன்று தந்திவர்ம பல்லவன் 5 ஆட்சி கல்வெட்டு ஒன்றில் விசயநல்லுழான் தம்பி கம்பன் அரையன் ஏற்படுத்தி மார்பிடுகு பெருங்கிணறு என்கிறது கல்வெட்டு
அதாவது கம்பன் அரையன் மார்பிடுகு முத்தரையர் பெயரில் இந்த கினறை உருவாக்கியதை குறிப்பிடுகிறது* 
🔥
*இதில் விசயநல்லுழான் பெயர் உள்ளது முத்தரையர் நாடு என்று குறிப்பிடும் நிருபதுங்கவர்மன் 26 ஆம் ஆட்சி கல்வெட்டில் விசயநல்லுழான் பெயர் உள்ளது இதில் மிக முக்கியம் பூதி தீரன் என்ற பெயர் விசயநல்லுழானுக்கு இருக்கிறது*
🔥
*சாத்தன் பூதி முத்தரையர் எனும் இளங்கோவதி அரையர் பெயரில் உள்ள பூதி என்ற பெயர் இவருக்கு இருப்பதால் இவர் சாத்தன் பூதி முத்தரையரின் அரசு அதிகாரியாக அல்லது ஒரு‌ படை வீரனாக இருக்க வாய்ப்பு உண்டு*
👑
*மீண்டும் மலரட்டும் முத்தரையர் ஆட்சி* 

Reference : 
Inscriptions of the pallava  t.v mahalingam ( no 190 )

South Indian inscriptions volume -  vi ( no 368 )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவை தொடரும்......
wwwaraiyarsuvaranmaran.com
🤝🤝🤝🤝🤝🤝🤝


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us