முத்தரையர் கோவை
May 18, 2024
தமிழ் முத்தரையர் கோவை என்ற நூல் பற்றி வரலாற்று அலசல்
தண்டியலங்காரம் நூல் :
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும் தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் (946-1070)
🔸தண்டியலங்காரம், பொதுவணியியல் 7ஆம் உரையில், அதன் உரையாசிரியர், " கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின " என்று கூறுகிறார்
அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலம் :
அமிர்தசாகரர் [1] ஓர் இலக்கண ஆசிரியர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களை இயற்றியவர். அமுதசாகரம் என்னும் நூலும் இவரால் இயற்றப்பட்டது. இவரது காலம் 11 ஆம் நூற்றாண்டு
யாப்பருங்கலம் ஒழிபியலில், அதன் விருத்தியுரைகாரர்- இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது : 👇
🔸குமரசேனாசிரியர் கோவையும், " தமிழ் முத்தரையர் கோவையும் " யாப் பருங்கலக் காரிகையும் போன்ற சந்ததால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின், ஓரடி பதினேழெழுத்தாம்
மறைந்துபோன தமிழ் நூல்கள் ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் யாப்பருங்கலம் நூலில் உள்ள ஒரு செய்யுளை இத தமிழ் முத்தரையர் கோவை நூலை சார்ந்த செய்யுள் என்று கூறுகிறார் அவர் கூறியது 👇
இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுளை உதாரணங் காட்டுகிறார்:
🔸"காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே."
இதே செய்யுளை யாப்பருங்கலம், தொடையோத்து 53ஆம் சூத்திர உரையிலும் மேற்கோள் காட்டுகிறார். இச் செய்யுள் இன்ன நூலைச் சேர்ந்தது என்பதை இவர் குறிப்பிட வில்லையாயினும், இது தமிழ் முத்தரையர் கோவையைச் சேர்ந்த செய்யுள் என்று கருதப்படுகிறது.
தமிழ் முத்தரையர் கோவை இப்போது கிடைக்கவில்லை யாகையினால், இது மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்றாகும். இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.
யாப்பருங்கலம் நூலில் மற்றும் ஒரு செய்யுள் பாடல் 👇
🔸உதுக்காண், சுரந்தானா வண்கைச் " சுவரன்மாப்பூதன் " பரந்தானாப் பல்புகழ் பாடி-இரந்தார்மாட் டின்மை அகல்வது போல இருணீங்க மன்னு மளித்தோ மழை?
இந்த செய்யுளில் " சுவரன் மாப்பூதன் "என்ற அரசனை புகழ்ந்து பாட பட்டுள்ளது இதில் வரும் சுவரன் மாப்பூதன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையராக இருக்கலாம் இந்த பாடலும் தமிழ் முத்தரையர் கோவை நூலை சார்ந்த தாக இருக்கலாம்