|

பேரரசர் அவதார திருநாள்

May 22, 2024

சூரியகுல சத்திரிய வம்சத்தில் தனி சரித்திரம் படைத்த சத்ரு கேசரி, சத்ரு மாமல்லன் (மாவீரன்)- நமது பேரரசர்.

♦  தன் வாழ்நாள் 16 பெரும் போர்களில் தோல்வியே காணாத மாபெரும் அதிதீரன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மட்டுமே. 14 போர்களை தன்னிச்சையாகவும் வென்றவர். இரண்டு போர்களில் பல்லவர்களுக்கு துணையாக நின்று வெற்றியை கண்டவர் நமது சிம்ம நாயகன் -பேரரசர் முத்தரையர்.

♦  எதிலும் எவருக்கும் நிகரில்லா மாவீரன் -நமது தமிழ் பேரரசர்.

♦  தமிழுக்கு முதல்மெய்கீர்த்தி கண்ட தமிழ்வேந்தன் -நமது பேரரசரே ஆவார். கன்னித்தமிழில் 24 வெண்பாக்களாக கல்வெட்டில் தமிழினை சிறப்பித்தவர்.

♦  வஞ்சிப் பூ சூடிய மன்னர்களில் வெற்றி வாகைப்பூவை சூடிய பெருமை நம் பேரரசருக்கு மட்டுமே..

♦  வாள் ஏந்தும் வம்சத்தில் பேரரசர் சுவரன்மாறன் அவர் ஏந்திய போர்வாள்- பிற்கால  அரசர்கள் எவராலும் தூக்ககூட முடியா வரலாறை கொண்டவர் நமது முத்தரையர் வாள்மாறன் மட்டுமே..

♦  வாளே ஏந்திய வாள்மாறன் என்று போற்றப்பட்டவர் பேரரசர் சுவரன் மாறன் முத்தரையர் ஆவார்.

♦  வாள் ஏந்த ஆசைபடும் அரசர்களில் அந்தவாளே தழுவ ஆசைப்படும் கை -பேரரசர் பெரும்பிடுகு கரங்களே.

♦  பேரிடி வீரனாய் எதிரிகளை  சிதைத்தெறிந்த வரலாறு கூறப்படுவது -பெரும்பிடுகு பேரரசரை மட்டுமே.

♦  சூரியகுல சத்திரிய வம்சத்தின் நிகரில்லா சூரியன் -பேரரசர் சுவரன்மாறன்.

♦  மூத்தகுடி முத்தரையர் வம்ச வீரமுப்பாட்டனே பேரரசர் முத்தரையர்.
வங்ககடலாய் தன் ஆட்சியை தமிழகம் முழுவதும் அமைத்த மாமன்னர் -நம் பேரரசரே.

♦  சதயம் கடந்து இன்றும் வாழும் தமிழர்களின் பேரரசர் பெரும்பிடுகு  முத்தரையர் மட்டுமே..

♦  சிவனுக்கு கண்கொடுத்து, பசுவிற்கு நீதி சொன்ன முதுகுடி சத்திரிய வம்சத்தின் சரித்திர நாயகன் -சீர்மாறன் (எ) பேரரசர்.

♦  தனிசிறப்பு கொண்ட தன்மான சிங்க தமிழரின்  நற்புகழாளன் பேரரசர் அவர்கள்.

♦  சூரியனை நெற்றியில் வைத்து, சிங்கத்தை குணத்தில் வைத்து மக்கள் நலனை மனதில் வைத்து ஆண்ட சத்திரியரே -நம் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு மன்னர்.

♦  தஞ்சையின் வேந்தர் "தஞ்சைக்கோன்"  என்று போற்றப்பட்டவரே நமது பேரரசர் முத்தரையர்.

தமிழ் முப்பாட்டன் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் புகழ் ஓங்கட்டும்.

பேரரசரின் வாரிசு மன்னர்களாய் நெஞ்சம் நிமிர்த்தி நின்றால்- எமனும் அஞ்சி எம்காலடியில் தஞ்சம்புகும் வீர வரலாறு படைத்த இனமே ராஜ "முத்தரையர் வம்சம்
  சங்ககால சாதியில் உதித்த சரித்திர நாயகன்.

முத்தரையர் அரச குலத்தின் முத்திரை பதித்த பெருவேந்தன்.

போரில் தோல்விகண்ட மன்னர்களுள் வெற்றி மட்டுமே செருக்குடன் கண்ட பெரும்பிடுகு பெருவேந்தன்.

16 பெரும்போர்களில் வெற்றிமட்டுமே கண்ட ஒரே *பேரரசன்*.

தஞ்சை நகரை தலைநகராக்கிய *தஞ்சை நற்புகழாளன்*.

முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட முதல் மாமன்னர்.

வல்லத்தில் வானளவு கோட்டை கட்டிய *வல்லக்கோன்.*

தஞ்சையையும், வல்லத்தையும் வரலாற்றில் பதித்த *தஞ்சைக்கோன்*.

வான்மாறனாய் விண்ணுலக புகழ்கொண்டு வாகைப்பூ மட்டுமே சூடும் *வாகைவேந்தன்*.

போர்வாள் கட்டித்தழுவும் கைகளை உடைய வீரமிக்க *வாள்மாறன்.*

படைகள் பல கொண்டு போர்கள் பல வென்ற சிங்கவம்சத்தின் பெரும்பாட்டன்.

எதிரிகளை நடுநடுங்க வைத்த *பேரிடி வேந்தன்*.

சத்ருக்களை (எதிரி) வீரத்தால் சிதரி ஓடவைத்த *சத்ருகேசரி*.

கயவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து கள்வனுக்கு கள்வராக எதிரிகளை வென்று மண்டியிட வைத்த *கள்வர் கள்வன்*.

*மக்கள் மனதை கவர்ந்த கள்வன்*.. பிரபஞ்சை மனதில் இறைவனாக இடம்பிடித்த அரசன்.

வலையர்குல பெருமை தாங்கி பெரும்படைகளை தன்வசம்கொண்டு தமிழகம் முழுவதும் வெற்றிகொடி நாட்டிய *மறப்படை மீனவன்*.

பலதேச மன்னர்கள் குன்றுகளில், காடுகளில் ஓடி ஒழிய, கழுகுகளும் ஓநாய்களும் பின்தொடர போரில் தன்னிகரில்லா பேரிடி வீரனாய் கர்ஜித்து வெற்றிகள் பலகொண்ட சிங்கத் தமிழனின் புகழ் பாடுவோம்..🙏

       முது தமிழினமே வாழ்க வாழ்க...!!
           ஆதி அரசர் இனமே வாழ்க..!!
       முத்தமிழ் முத்தரையர்களே
            வாழ்க வாழ்க...!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us