|

முத்தரையர் வரலாற்றில் கொடும்பாளூர்...

May 25, 2024

இடங்கழி நாயனார் வரலாறு

கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர் அந்நகரத்தினில் இருக்கும் "வேளிர் குலத்து அரசளித்து மன்னிய பொன்னம்பலத்து மணிமுகட்டின் பாக்கொங்கின் மன்னுதுலைப் பசும் பொன்னாற் பயில்பிழம்பாம் மிசையணிந்த பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குல முதல்வன்"

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொன் வேய்ந்த ஆதித்த சோழனின் புகழ் மரபின் குல முதல்வர் தான் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசர் இடங்கழி நாயனார் என்று புலவர் பெருமான் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேளிர் குலத்து கொடும்பாளூர் இருக்குவேளிர் அரசர்களும், சோழ குலத்து அரசர்களும் 'ஒரே மரபினர்' என்பதை "ஆதித்தன் புகழ்மரபிற் குல முதல்வன்" என்ற பெரியபுராணத்தின் கூற்று உறுதிசெய்கிறது.

பாண்டியர் வேளீர் போர்:

பாண்டியர்களின் யானைகளை கவர்ந்ததால் கொடும்பாளூர்வேள் பிரவிராஜித்து மீது பாண்டியன் போரிட்டார்.

பாண்டியர் பல்லவர் போர்:

பாண்டியர்களின் கொடும்பாளூர் தாக்குதலுக்கு பதிலடி தருவதாக பல்லவர்கள் பாண்டியருக்கு எதிராக போரிட்டனர்.

" கொடும்புரிசை நெடுங்கில் கொடும்பாளூர் கூடார் கடும்பரியும் கடுங்களிறும் கைவேலில் கைக்கொண்டும்."

கொடும்பாளூரில் நடந்த போரில் பல்லவரை புறங்காட்டி ஓடச் செய்தார் பாண்டியன் என்று பாண்டியர் செப்பேடு கூறுகிறது. பல்லவர் பாண்டியர் போரிலும் பாண்டியனே வெற்றி பெற்றார்.

பாண்டியருக்கும் சுவரன் மாறன் முத்தரையருக்கும் போர்:

பல்லவர்கள் பாண்டியர்களிடம் தோற்றுப்போனதால் பல்லவனுக்காக சுவரன் மாறன் பாண்டியன் மீது போர் தொடுத்தார்.இப்போரில் கொடும்பாளூரில் நடைபெற்ற கொடுரமான போராக இப்போர் மாறியது. பாண்டிய அரசு நிலைகுலைந்து போனது. சுவரன் மாறனின் கோவத்தால் கோட்டை சுவர்கள் தூள்,தூளாக ஆனது.இப்போரை பற்றி தமிழ் புலவர்ளான பாச்சில்வேள் நம்பனும் குவாவன் காஞ்சனும் பாடியுள்ளனர்.
அன்று சுவரன் மாறனிடம் பாண்டியர் படை ஓடியதுடன் கொடும்பாளூர் முத்தரையர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.முத்தரையர் ஆதரவில் கொடும்பாளூரில் வழுப்பெற்ற வேளிர் மரபினர்.

முத்தரையர் மரபில் பெண்களை திருமணம் செய்து கொண்டு முத்தரையர்களின் மருமகன் என்ற அந்தஸ்தை பெற்றனர். முத்தரையர் மரபில் வந்த சாத்தன்பூதி வாரிசுகளை திருமணம் முடித்தனர்.

முத்தரையர் உறவில் இருப்பதை வெளிக்காட்டமுத்தரையர் மரபில் உள்ள பூதி என்ற பட்டத்தை கொடும்பாளூர் வேளிர் வம்சாவளிகளுக்கு வைத்துக்கொண்டனர்.

பூதிவிக்கரமகேசரி,பூதிபராதகன்,பூதிஆதிச்சபிடாரி,மறவம்பூதி,விடேல்விடுகு இளங்கோவேள் போன்ற பல பெயர்களை கொடும்பாளூர் வேளிர் மரபினர் கொண்டுள்ளனர்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us