|

முத்தரையர் வரலாற்றில் சக்கரவர்த்தி கரிகாலன்

May 25, 2024

நளியிரு முன்னீர் நாவாய் ஒட்டி வளி தொழில் ஆண்ட உறவோன் மறுக! கள இயல் யானைக் கரிகால் வளவ!"

புறநானூறு பாடல்-66

இப்பாடலில் கரிகால் வளவன் காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் மரபில் தோன்றியவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருஞ்சொற்பொருள்:

1. நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 5. அன்றே = அல்லவா; 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.

திரைராஜ்ய:-

புண்ணிய குமார முத்துராஜா வெளியிட்ட மாலேபாடு செப்புபட்டயத்தில் "திரைராஜ்யர்” என மன்னரின் வம்சத்தை பற்றி தெரிவிக்கிறது. திரை என்றால் அலை என பொருள்படும். அலை பொதுவாக கடற்கரை ஒட்டி காணப்படும்.

கரிகால் சோழனின் சந்ததி என்றும் சூரிய வம்சம் என்றும் குறிப்பிட்டு திரைராஜ்யர் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சோழர்கள் கடல் அலையை ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்பது புலப்படுகிறது.

மேலும்சோழர்களின் பட்டங்களைக் உற்றுநோக்கினால் சோழன்- சோழிய-சோழி, முத்துராஜா-முத்து, கிள்ளி கிள்ளிஞ்சல் என கடற்கரையை ஒட்டி கிடைக்கும் பொருள்களின் பெயராகவே உள்ளது. காவிரிபூம்பட்டினம் என்ற கடற்கரை நகரம் முற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது என்பதை அறிவோம். அந்த நகரம் கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தின் தென்பகுதியில் உள்ளது. கழிமுகத்தின் வடபகுதியில் சோழர்களின் குலதெய்வமான நடராஜர் கோயில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.

எனவே சோழர்களின் தோற்றம் கடற்கரையை ஒட்டியே முற்காலத்தில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. அதன் காரணமாகவே மாலேபாடு செப்பேட்டில் ரேநாட்டு சோழர் சோழ மகாராஜா புண்ணிய குமார முத்துராஜா தனது வம்சத்தைப் பற்றி தெரிவிக்கும் பொழுது அலையை ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us