கொடும்பாளூர் யுத்தத்தில் முத்தரையர்
May 25, 2024
கொடும்பாளூர் போரும்,சுவரன் மாறனும்
வரலாற்றில் கொடும்பாளூர்:
சங்க இலக்கியம் காலம் முதலே கொடும்பாளூர் ஓர் முக்கிய நகரமாக திகழ்ந்துள்ளது.இவ்வூரின் முதல் பெயர் கொடும்பை ஆகும்.பிற்காலத்தில் கொடும்பையுடன் ஊர் சேர்ந்து கொடும்பையூர்,கொடும்பாளூர் என்று மறுவியுள்ளது.
கொடும்பாளூரை ஆண்ட மன்னர்கள்:
கொடும்பாளூரை வேளிர் என்ற சிற்றரசு மரபினர் நெடுங்காலம் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
*வேளிர்
*பாண்டியர்
*முத்தரையர் கீழ் வேளிர்
*வேளிர்
*சோழர் கீழ் வேளிர்
*சோழர்
*நாயக்கர்
*தொண்டைமான்
கொடும்பாளூரில் நடந்த போர்கள்:
1)பாண்டியர் வேளீர் போர்
2)பாண்டியர் பல்லவர் போர்
3)பாண்டியர் முத்தரையர் போர்
4)வேளிரும்,வீரபாண்டியர்,கரூர் வேளிர், போர்
பாண்டியர் வேளீர் போர்:
பாண்டியர்களின் யானைகளை கவர்ந்ததால் கொடும்பாளூர்வேள் பிரவிராஜித்து மீது பாண்டியன் போரிட்டார்.
பாண்டியர் பல்லவர் போர்:
பாண்டியர்களின் கொடும்பாளூர் தாக்குதலுக்கு பதிலடி தருவதாக பல்லவர்கள் பாண்டியருக்கு எதிராக போரிட்டனர்.
"கொடும்புரிசை நெடுங்கில் கொடும்பாளூர் கூடார்
கடும்பரியும் கடுங்களிறும் கைவேலில் கைக்கொண்டும்"
கொடும்பாளூரில் நடந்த போரில் பல்லவரை புறங்காட்டி ஓடச் செய்தார் பாண்டியன் என்று பாண்டியர் செப்பேடு கூறுகிறது. பல்லவர் பாண்டியர் போரிலும் பாண்டியனே வெற்றி பெற்றார்.
பாண்டியருக்கும் சுவரன் மாறன் முத்தரையருக்கும் போர்:
பல்லவர்கள் பாண்டியர்களிடம் தோற்றுப்போனதால் பல்லவனுக்காக சுவரன் மாறன் பாண்டியன் மீது போர் தொடுத்தார்.இப்போரில் கொடும்பாளூரில் நடைபெற்ற கொடுரமான போராக இப்போர் மாறியது.பாண்டிய அரசு நிலைகுலைந்து போனது.சுவரன் மாறனின் கோவத்தால் கோட்டை சுவர்கள் தூள்,தூளாக ஆனது.இப்போரை பற்றி தமிழ் புலவர்ளான பாச்சில்வேள் நம்பனும்,குவாவன் காஞ்சனும் பாடியுள்ளனர்.
கொடும்பாளூர் போர் பற்றிய வெண்பா-1
"வஞ்சிப்பூ சுடிய வாளமருள் வாகைப்பூக்
குஞ்சி கமழ்ண்ணில் கோமாறன்-தஞ்சைக்கோன்
கோமாரி மொய்ம்பில் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
தோளால் உலகளிக்கும் தோள்."
இச்செய்யுள் பாச்சில் வேள் நம்பிநம்பின் பாடல் கொடுமையான போரில் மணம் கவரும் வாகைப்பூவை தலையில் கிரிடம்போல சூடியவராக அரசன் சுவரன் மாறன் ஆன தஞ்சைக்கோன் வலிமை மிக்க தோள் கொண்டவராக இருந்துள்ளார்.அந்த வலிமை மிக்க தோளால் கொடும்பாளூரைச் சினந்து அழித்தார்.அந்த வலிமையான தோளால் இவ்வுலகினைன் காப்பார் என்று இப்பாடல் கூறுகிறது.
பொருள் சுருக்கம்:
சுவரன் மாறன் வாகைப்பூவை கிரடமாக தலையில்அணிந்து தம்முடைய வலிமையான தோளால் கொடும்பாளூரை சினம் கொண்டு அழித்துள்ளார்.பின் அதே தோள் கொண்ட சுவரன் மாறன் இந்த கொடும்பாளூரை காத்துள்ளார்.
கொடும்பாளூர் போர் பற்றிய வெண்பா-2
"ஏறி விசும்பு இருநிலமாயத் தென்பவால்
மாறன் செருவேல் மறம் கனன்று-சீறக்
கொடிமாடத் திண்கொடும்பை கூடாத மன்னர் நெடுமா மதில் இடிந்த நீறு."
இப்பாடலை குவாவன் காஞ்சன் பாடியுள்ளார்.சுவரன் மாறன் வேலுடன் சினந்து சீறக்கொடிக்கள் பறக்கும் மாடங்களையுடைய அழகிய கொடும்பை நகரத்தில் பகைவர்(பாண்டியரை) வென்று நீண்ட மதில்களை இடித்து தூள்,தூளாகினார்.இதில் தூசி வாணம் வரை பறவி இருந்ததாக புலவர் கூறுகின்றார்.
வழுப்பெற்ற வேளிர் ஆட்சி:
பாண்டியர்களை வீழ்த்தமுடியாமல் தவித்த கொடும்பாளூர் வேளிருக்கு பல்லவர் துணையாக வந்து,பல்லவரையே ஓடவிட்டனர் பாண்டியர்கள்.பல்லவருக்காக முத்தரையர் வந்தனர். பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையருடன் பாண்டியன் படை தவுடிபுடியானது என்பதே உண்மை.பாண்டியர் அடிவாங்கிய போரில் கொடும்பாளூர் போர் மிக முக்கியமான போராகும்.சுவரன் மாறனின் யானைப்படை பாண்டியர்களின் மதில் சுவர்களை உடைக்கும் போது கொடும்பாளூரே புழுதி புயல் வந்ததாக குவாவன் காஞ்சன் கூறுகிறார்.அன்று சுவரன் மாறனிடம் பாண்டியர் படை ஓடியதுடன் கொடும்பாளூர் முத்தரையர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.முத்தரையர் ஆதரவில் கொடும்பாளூரில் வழுப்பெற்ற வேளிர் மரபினர். கொடும்பாளூரை பாண்டியரிடம் இருந்து காக்க வேண்டும் அதே சமயம் ஆட்சியும் செய்ய வேண்டும்.பல்லவர்கள் பெரும்வேந்தர்கள் இருந்தாலும் சுவரன் மாறன் போல ஒரு மன்னரையும் முத்தரையர் பேரரசையும் வேளிர்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் ஆகையால் பல்லவர்களின் தயவை கைவிட்டு முத்தரையர் மன்னர்களுடன் நெருக்கம் காட்ட தொடங்கினர்.முத்தரையர் மரபில் பெண்களை திருமணம் செய்து கொண்டு முத்தரையர்களின் மருமகன் என்ற அந்தஸ்தை பெற்றனர்.முத்தரையர் மரபில் வந்த சாத்தன்பூதி வாரிசுகளை திருமணம் முடித்தனர்.முத்தரையர் உறவில் இருப்பதை வெளிக்காட்டமுத்தரையர் மரபில் உள்ள பூதி என்ற பட்டத்தை கொடும்பாளூர் வேளிர் வம்சாவளிகளுக்கு வைத்துக்கொண்டனர். பூதிவிக்கரமகேசரி,பூதிபராதகன்,பூதிஆதிச்சபிடாரி,மறவம்பூதி,விடேல்விடுகு இளங்கோவேள் போன்ற பல பெயர்களை கொடும்பாளூர் வேளிர் மரபினர் கொண்டுள்ளனர்.
சுவரன் மாறன் எடுப்பித்த கொடும்பாளூர் முதுகுன்றேஸ்வரர்:
பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறன் பாண்டியருடன் ஏற்பட்ட போரில் கொடும்பாளூரை கடும் கோவம் கொண்டு தாக்கினார்.இதில் கொடும்பாளூரே புழுதி புயலாக காட்சியளித்தது.இதை தொடர்ந்து சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் கொடும்பாளூரில் சிவனுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பினார்.இவ்வாலயம் முதுகுன்றேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.இக்கற்றளியில் சுவரன் மாறன் முத்தரையர் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.ஆனால் இங்குள்ள கோவில் முத்தரையர் கலைபாணியில் அமைந்துள்ளது. இக்கோவில் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலின் பழமையான கல்வெட்டாக பரந்தகனின் கல்வெட்டு அமைந்துள்ளது.இதை வைத்து சோழர்கள் தான் இப்பொழுது கட்டினார்கள் என்று பொதுவான கூற்று உள்ளது.ஆனால் இக்கோயிலை முத்தரைகளை கட்டி உள்ளார்கள்.பிற்காலத்தில் வந்த சோழர்கள் கோவிலில் புதுப்பித்து தங்களின் கல்வெட்டுகளை பதித்துள்ளனர். இக்கோவில் முத்தரையர் காலத்தில் என்பதை கூறுவதற்கு வலுவான ஆதாரமாக சிவலிங்கமே விளங்குகிறது. பேரரசர் பெரும்பிடுகு சுவரன் மாறனின் தலைநகரம் அருகே உள்ள நேமத்தில் ஆயிரம் சிவலிங்கங்களை வழிபட்டார். அதில் உள்ள முக்கியமான 12பட்டை கொண்ட சிவலிங்கம் வடிவத்தை அப்படியே கொடும்பாளூரிலும் அதே கலைப்பணியில் அமைத்துள்ளார் சுவரன் மாறன் முத்தரையர்.இந்த லிங்கம் தற்போது கோவில் கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ளது.
வெளியீடு:
புதுகை அன்பு அவர்கள் , மத்திய மண்டல அமைப்பாளர் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம்
தொகுப்பு:
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர் முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்