விழுப்புரம் வரலாற்றில் முத்தரையர்
May 25, 2024
*விழுப்புரம் என்கிற பெயரை(ஊர்) உருவாக்கியவர்கள் முத்தரையர்கள்*
உத்தம சோழன்(ஆட்சி காலம் கி.பி 970-985).
இவனின் கீழ் நிறைய குறுநில மன்னர்கள் இருந்தார்கள் மற்றும் இவனின் பங்காளிகள் என்கிற முத்தரையர்கள் இவனின் பாதுகாவலர்கள். முத்தரையர் என்பது சோழரின் பட்டம் என்பதை நாம் அறிவோம்.
உத்தம சோழனின் காலத்தில் நிறைய முத்தரையர்கள் வாழ்ந்து இருந்தார்கள். அதில் ஒருவன் தான் முடிகொண்ட சோழன் விழுப்பரையன் (முத்தரையன்). இவன் உத்தம சோழன் கீழ் இருந்த ஒரு தலைவன் ஆவான். இன்றைய செங்கல்பட்டு அருகே பாலூர் என்கிற ஒரு கிராமம் உள்ளது. இந்த பாலூர் தான் இவனின் தலைநகரம் ஆகும். பாலூர் என்கிற கிராமத்தை புகைப்படத்தில் பாருங்கள். அது ஒரு நதியின் அருகே உள்ளது. இவன் ஒரு மீனவன்(வலையன்). தற்போது நதியின் பெயர் பாலர் என்று அழைக்கப்படுகிறது.
இப்பொது விழுப்பரையன் என்கிற பெயரை கவுணிப்போம்.
இந்த பெயர் விழுப்பேரடி-அரையன், விழுப்பேரரயர் என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த பெயரின் அருத்தம் என்னவின்றல் *விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)*
வலையர் குலத்தை சேர்ந்த முத்தரையர்கள் விழுப்புண் பெற்ற அரையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களின் இருந்து தான் விழுப்புரம் என்கிற பெயர் வந்தது.
குறிப்பு : முடிகொண்ட சோழன் விழுப்பரையன்.. பாலூர் அம்பலத்தட்டி என்றும் அழைக்கப்பட்டான்.