|

ஓம் முருகா

May 25, 2024

ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை சிறை பிடித்த முருகன்..!!

#பிரம்மா அவசர பணி நிமித்தமாக, #சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலைக்கு #முருகன் சன்னதி வழியாக சென்றார். தன்னை கவனிக்காமல், பிரம்மா செல்வதை கவனித்த முருகப்பெருமான் கோபம் கொண்டார். பிரம்மாவை அழைத்த முருகன், "நீங்கள் யார்..??" என்ற அதிகார தோரணையில் கேட்டார். நான் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா. நான் அவசர வேலை நிமித்தமாக, #கைலாயம் சென்று ஈசனை சந்திக்க செல்வதால் தங்களை கவனிக்காமல் சென்று விட்டேன் என்று சொன்னார்.

கோபமான முருக பெருமான், பிரம்மனை நோக்கி, "#ஓம் எனும் #பிரணவ மந்திரத்திற்கு சரியான அர்த்ததினை சொல்லிவிட்டு, இங்கிருந்து நகருங்கள்..!!" என்று முருகபெருமான் தன் இடுப்பிலே இரு கரங்களையும் வைத்து கொண்டார். பிரம்மா, #ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாமல் திருதிருவென விழித்தார். கோபமடைந்த முருகப்பெருமான், பிரம்மாவின் தலையில் ஒரு #குட்டு வைத்து அங்கே இருந்த ஒரு கருங்கல்லில் #சங்கிலியால் கட்டிப்போட்டு சிறை வைத்துவிட்டார்.

#ஆண்டார்குப்பம் திருத்தலத்தில் முருகபெருமான் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் விழித்த பிரம்மாவை, சங்கிலியால் கட்டிப்போட்டு சிறைவைக்கப்பட்ட செய்தி அறிந்த சிவபெருமான், முருகப்பெருமானிடம் வேண்டி பிரம்மாவை விடுவிக்க செய்தார். பிரம்மாவும் தன் தவறை உணர்ந்து முருகனிடம் வருத்தம் தெரிவித்ததால் விடுவிக்கப்பட்டார் என்ற ஐதிகம் உண்டு.

பிரம்மா சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்ட கருங்கல் இன்றும் அப்படியே உள்ளது. கோயில் தூணில் இந்த நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது..!!

அமைவிடம்: சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், #தச்சூர் கூட்டுச் சாலை வழியாக #பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, #ஆண்டார்குப்பம்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us