|

தமிழக வரலாற்றில் வலையர்

May 27, 2024

"மூத்த குடி வேட்டுவனும் வலையனும் ஒன்னு"

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி.  இந்த பாடல் ஒன்பதாம் நூற்றாண்டே சேர்ந்த "புறப்பொருள் வெண்பா மாலை" என்கிற நூலில் காணலாம். ஆயிரம் வருடம் முன்பே தமிழ் தான் உலகத்தில் தாய்(மூத்த) மொழி என்று நம் முன்னோர்கள் பதிவு செய்துவிட்டார்கள். 

அதாவது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்பதற்கு குறிஞ்சி வாழ்வு தோன்றி, மருத வாழ்வு தோன்றுவதற்கு இடப்பட்ட காலத்தில் தோன்றியவர்கள் தமிழர்கள் என்று பொருள் ஆகும். குறிஞ்சி மற்றும் முல்லை தினை காலத்திலே தமிழ் இனம் வந்துவிட்டது. அதே சமயத்தில் இரண்டாயிரம் மூவாயிரம் வருடம் முன்பே இந்த பூமி தமிழர்களுக்கு சொந்தமானது எனவும், அணைத்து மக்களும் தமிழர்களின் மக்கள் என்று கணியன் பூங்குன்றனார் என்கிற சங்க கால புலவர் "புறநானூறு"  பாடலில் சொல்லி உள்ளார். ஆக தமிழர்களே உலகத்தில் மூத்த இனம் மற்றும் தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்களின் இருந்து பிரிக்கப்பட்டு இன்று ஒரு தனி இனக்குழுவாக  வாழ்பவர்கள்.   

குறிஞ்சியில்(மலை) மட்டும் மனிதன் வாழும் போது அவன்  தொகையில் மிகவும் கணிசமாக இருந்தான். அப்போது அவனின் உணவு பெரும்பாலும் பழங்களும் , பழங்கள்  இல்லாத நேரத்தில் விலங்கு, பறவைகள் மற்றும் மீன்களை வேட்டை ஆடி அவனின் பசியை தீர்த்து கொண்டான். 

ஆனால் அவன் வேட்டையில் அதிகபட்சம் வெற்றி காணவில்லை ஏனெனில் விலங்குகளையும் பறவைகளையும் மீன்களையும்  சுலபமாக பிடிக்க அவனிடம் சரியான கருவிகள் இல்லை. 
பறவைகள் கூட்டமாக பறந்து போகிவிடும். விலங்குகள் மனிதனை விட வேகமாக ஓடும் திறன் கொண்டு இருப்பதால் அது தப்பிச்சு விடும். மீன்களையும் பிடிப்பது மிகவும் கடினம்.

ஆனால் இயற்கை மனிதனுக்கு ஒரு போதும் துரோகம் செய்வது இல்லை. ஆம், மனிதன் சிலந்தியை கவுணிகிறான். சிலந்தி ஒரு வலையை உருவாக்கி அதோடு வலையில் பல பூச்சிகளை சிக்க வைக்க சேயும். இதே பார்த்த மனிதன் அதிர்ச்சி அடைகிறான். 
சிலந்தியின் திறனை மனிதனும் அவனின் வாழ்க்கையில் பயன்படுத்திகிறான், அதாவது மீன் பிடிக்கவும், பறவைகளை பிடிக்க வலை என்கிற கருவி இவனுக்கு மிகவும் உதேவியாக இருந்தது. மேலும் இவன் அடர்த்தியான வலையை பயன்படுத்தி பெரிய விலங்குகளை வலையில் சிக்க வைத்து அது மேல் ஈட்டிய வீசி கொள்கிறான். 

"செந்தமிழ்" என்கிற புத்தகத்தில் பேறிஞர் அ.மா.பரிமணம் என்கிற ஆய்வாளர்  "வலையினைப்  பயன்படுத்துபவன் வலைஞன் எனவும், வேட்டுவன் எனவும் கூறப்படுகின்றான் என்று குறிப்பிட்டு உள்ளார். இதிலிருந்து மூத்த குடி வேட்டுவரும் வலையரும் ஒருவரே என்று தெரியவருகிறது.

வலையர்களின்(வேட்டுவர்) பழக்கவழக்கங்களும், கலாச்சாரத்தையும் கவுணித்தோம் என்றாலும் இவர்களே மிகவும் பண்டைய மக்கள் என்கிற முடிவுக்கும் நாம் வரலாம்.



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us