முத்தரையர் வரலாற்றில்
May 27, 2024
சுந்தர சோழன் அன்பில் செப்பேடு செப்பேடுகளில் கோச்செங்கணானுக்குப் பிறகு கோசெங்கணன் மகன் நல்லடிக்கோன் என்பவன் குறிக்கப்படுகிறான் . இம்மன்னன் வல்லத்தில் இருந்து அரசாண்டுள்ளான் .
நற்றேர்க் கடும்பகட்டி யானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லங் கிழவோன் நல்லடி யுள்ளா னாகவும் ( அகம் . 356 )
எனவரும் பரணர் பாடலும் , நல்லடியைக் குறிப்பிடும் . இப்பாடலை நோக்கும்போது வல்லம் என்னும் இப்பேரூர் மருதநில வளமுடையதாகவும் சோழமன்னர் அரசு வீற்றிருத்தற்குரிய அரண் ( பாதுகாப்பு ) உடையதாகவும் விளங்கியமை நன்கு புலனாகிறது . மருகன் என்பதை மருமகன் என்று குறிப்பிடுவதைவிட வழித்தோன்றல் எனலாம்
வல்லக்கோன் : -
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை புகழ்ந்து குவாவன் காஞ்சன் இப்பாடலை பாடியுள்ளார்
அல்லிற் பிரிந்தார்க்கே யல்லையாய்க் காலந் தான் - முல்லைக்கே முற்படுமோ யென்றென்று - " வல்லக் கோன் " காரைவாய்ப் போர் வென்ற வேல்மாறன் கை போலும் - காரைவாய்க கேனேனே கண்டு.
காரை என்ற ஊரில் நடைபெற்ற போர் இவனது வெற்றியை கூறுகிறது. " வல்லக்கோன் " என்ற விருதுப் பெயரும் காணப்படுகிறது. இவனது கை வேலை, கார்மேகம் மழை பொழிவுக்கு உவமையாகவும். தலைவனை பிரிந்த தலைவியின் நிலையினை முல்லைப் பூத்துக் குழுங்கும் கார்மேகம் காலம் என்றும் விவரிக்கின்றது.
இப்பாடல் மூலம் வல்லத்து அரசன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று தெரிகிறது
ரேநாட்டு சோழன் தனஞ்சய முத்துராஜா முதல் அண்ணன் சிம்மவிஷ்னு தான் கோசெங்கணன் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தனஞ்சய முத்துராஜா இவர் இரண்டாவது அண்ணன் சுந்தராநந்தன் இவரும் ரேநாட்டின் மேல் கீழ் பகுதியை அரசால கோசெங்கணன் எனும் சிம்மவிஷ்னு சோழ நாட்டை அரசாண்டு வந்தார்
கோசெங்கணன் மகன் நல்லடி இவர் வல்லம் கோட்டையில் இருந்து ஆண்டவர் என்று அகநானூறு பாடல் தெரிவிக்கிறது
ரேநாட்டு சோழர் தனஞ்சய முத்துராஜா முதல் அண்ணன் கோகோசெங்கணன் மகன் நல்லடிக்கு வாரிசு இல்லாத காரணத்தால் தனஞ்சய முத்துராஜா மகன் மகேந்திர விக்ரம வர்மன் சோழனின் முதல் மகன் குவாவன் எனும் குணமுதிதனுக்கு சோழ நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது
இவர் தான் தன் தாத்தா தனஞ்சய முத்துராஜா பெயரில் தஞ்சாவூர் பெயரை உருவாக்கி இருக்க வேண்டும்
குவாவன் எனும் குணமுதிதனை தொடர்ந்து அவர் மகன் குவாவன் மாறன் எனும் முதலாம் பெரும்பிடுகு முத்தரையர் தொடர்ந்து அனைத்து அரசர்களும் வல்லம் கோட்டையிலே அரசாண்டனர் இதனால் தான் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை புலவர்கள் " வல்லக்கோன் ( வல்லத்து அரசன் ) " என்று பாடியுள்ளார்கள்