பேரரசர் விருதுப்பெயர்கள்
May 28, 2024
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் விருதுப்பெயர்கள்:
💥💥💥💥💥💥💥💥
செந்தலையிலுள்ள சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையர் நியமத்தில் தான் எடுப்பித்த பிடாரி கோவில் குறித்து தெரிவிக்கிறார். அதில் தனது விருதுப்பெயரினையும் பதிவு செய்கிறார்.
"சுவரன் மாறன்கள் எடுப்பித்த பிடாரி கோயில் அவனெறிந்த ஊர்களு
மவன் பேர்களும்
அவனைப் பாடினார் பேர்களும் இத்தூண் கண்மேலெழுதின இவை"
என்று செந்தலையிலுள்ள கோயில் தூணில் இன்றும் ஒரு கல்வெட்டைக் காணலாம்.
அதே தூணின் மறுபக்கத்தில் சுவரன் மாறனின் பட்டப் பெயர்கள் கீழ்வருமாறு எழுதப் பட்டுள்ளன.
1. ஸ்ரீ சத்ரு மல்லன்
2. ஸ்ரீ கள்வர் கள்வன்
3.ஸ்ரீ அதிசாகசன்
அங்குக் காணப்பெறும் மற்ற கல்வெட்டுகளில் இருந்து
வேறு சில பட்டப்பெயர்களும் சுவரன் மாறனுக்கு வழங்கி வந்தமை புலனாகிறது.
4.ஸ்ரீ மாறன்
5. அபிமான தீரன்
6.சத்ரு கேசரி
7.தமராலயன்
8.செரு மாறன்
9.வேல் மாறன்
10. சாத்தன்மாறன்
11. தஞ்சைக் கோன்
12.வல்லக் கோன்
13. வான் மாறன்
பட்டப்பெயர்களும் விளக்கங்களும்
சதிரு மல்லன் என்பதற்குப் பகைவர்களை அடக்கும் பலம் பொருந்தியவன் என்றும்,அதிசாகசன் என்பதற்கு மிகுந்த தீரச் செயல்களைச் செய்பவன் என்றும்,
ஸ்ரீ மாறன் என்பதற்கு அதிக வேட்கையுடையவர்களை அழிக்கின்ற ஆற்றல் உடையவன் என்றும்,அபிமானதீரன் என்பதற்குக் கர்வங் கொண்ட எதிரிகளுக்குப் பகைவன் என்றும்,
சத்ரு கேசரி என்பதற்கு எதிரிகளின் அரிமா என்றும், தமராலயன் என்பதற்கு அமைதியின் உறைவிடம் என்றும், செருமாறன் என்பதற்குப் போர்களிலே பகைவர்களை அழிப்பவன் என்றும்,
தஞ்சைக்கோன் என்பதற்குத் தஞ்சையின் மன்னன் என்றும், வல்லக்கோன் என்பதற்கு வல்லத்தை அரசாண்டவன் என்றும் பொருள் கூறுவர். வாண்மாறன் என்பது “வாள்மாறன்" என்பதன் மரூஉ எனக் கொண்டால், வாள் ஏந்திப் போரிடுவதில் கொள்ளலாம். வல்லவன் என்று கூறலாம்
கள்வர் கள்வன்
சுவரன் மாறன் பூண்டிருந்த பட்டப் பெயர்களிலே "கள்வர் கள்வன்” என்னும் பட்டப்பெயர் மிகவும் சிறப்பானதாகும். கள்வர் கள்வன் என்பதற்குக் கள்வர்களின் தலைவன் என்று பொருள் கொண்டும்,களப்பிரரின் எதிரி என்றும் பொருள் கொண்டுள்ளனர்.
ராஜராஜன் என்பது போல் 'கள்வர் கள்வன்' என்பதைக் 'கள்வர்களுக்குக் கள்வன்' என்று பொருள் கொள்ளலாம்
🙏