முதலாம் பெரும்பிடுகு முத்தரையர்
May 28, 2024
பொன்விளைந்தப்பட்டி குவாவன் கல்வெட்டு:
தஞ்சை மாவட்டம் பொன்விளைந்தப்பட்டி குளத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. இது இரண்டாம் நந்திவர்மன் கால கல்வெட்டாகும். இதில் குவாவனது மனைவி பள்ளிச்சந்தமாய் நிலதானம் அளிக்கிறார். இவருக்கு பெரும்பிடுகு முத்தரையன் என்ற பட்டம் உண்டு. புகழ்பெற்ற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பாட்டனார் இவர்.இவருக்கு இரு மகன்கள்
1.குவாவன் மாறன் 2.குவாவன் சாத்தன்
குவாவன் மாறன் தஞ்சையை சுற்றியுள்ள பகுதியிலும் குவாவன் சாத்தன் புதுக்கோட்டை பகுதியிலும் சமகாலத்தில் ஆள்கின்றனர்.
இக்கல்வெட்டு மொத்தம் 39 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது,பெரும்பான்மையான எழுத்துகள் அழிந்துள்ளதால், இக்கல்வெட்டின் முழுமையான பொருளை அறியமுடியவில்லை.