பேரரசர் பெயரில் விருது
May 30, 2024
*பேரரசர் பெயரில் விருது*
🙏
*29-5-2024 அன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ,செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ,தமிழ்த்துறை பேராசிரியர் ஜ.வள்ளி அவர்கள் கல்வெட்டில் மற்றும் மரபு மேலாண்மை பட்டய படிப்பில் 2022-2023 கல்வி ஆண்டில் முதல் மதிப்பெண் பெற்றார்*.
🙏
*அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக மத்திய பல்கலைக்கழகதில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் வரலாற்று ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் சார்பாக முதல் மதிப்பெண் பெற்ற பேராசிரியை ஜ. வள்ளி அவர்களுக்கு தங்க மெடல் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி.பத்மநாபன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பெரிது துணை நின்ற பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஸ்ணன், பதிவாளர்,தேர்வு நெறியாளர் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் ச.இரவி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி ! மேலும் அறக்கட்டளை நிதிக்கு, நன்கொடை வழங்கிய உறவுகளுக்கு நன்றி* !
🤝
*தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள், அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு*
🤝🤝🤝
*வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி*🙏wwwaraiyarsuvaranmaran.com🙏🙏🙏