Kannappar Nayanar
Jun 01, 2024
திருமெய்யம் வேணுவனநாதர் ஆலயத்தில் இருக்கும் கண்ணப்ப நாயனார் சிலை இது.
கண்ணப்ப நாயனார் கதையின் நிகழ்ச்சி இந்தச் சிலையில் உள்ளது. சிவனுக்குப் படைப்பதற்காக தனது ஒரு கண்ணை நோண்டி இடது கரத்தில் வைத்துள்ளார். வலது காலை வளைத்தும் இடதுகாலைச் சற்று வைத்து ஊன்றியும் நிற்கிறார். சிவலிங்கம் அவர் காலடியில் உள்ளது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சிறப்பம்சம் ஏதும் தெரியாவிட்டாலும், அவரது காலணி மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது..
கண்ணப்ப நாயனார் அணிந்திருந்த தோல் செருப்பு அக்காலகட்டத்தில் இருந்த கைத்தொழில்நுட்பத்தைக் காண்பிக்கிறது.