குவாவன்
Jun 03, 2024
குவாவன்
"குவாவன்" என்ற பெயரை முத்தரையர் அரச மரபினர் மட்டுமே கொண்டுள்ளனர்.
1)தஞ்சை மாவட்டம்,செந்தலை சுவரன் மாறன் காலத்து கல்வெட்டுத் தூணில் மூன்று தலைமுறைகளை பற்றி கூறும் கல்வெட்டு உள்ளது.அதில் முதலாம் பெரும்பிடுகு முத்தரைரையரை "பெரும்பிடுகு முத்தரையரான குவாவன் மாறன்" என்று குறிப்பிட்டுள்ளனர்.அப்படி என்றால் கிபி ஆறாம் நூற்றாண்டில் பெரும்பிடுகு குவாவன் மாறன் என்ற அரசர் அறிப்படுகிறார்.
2)புதுக்கோட்டை மாவட்டம்,மலையடிப்பட்டி குடைவரையில் நந்திவர்ம பல்லவன் காலத்தில் "குவாவன் சாத்தனான விடேல் விடுகு முத்தரையர்"பற்றி குறிப்பிடுகிறது.
3)திருச்சி மாவட்டம்,குண்டூர் ஏரியில் உள்ள குமிழிதூம்பு மற்றும் அய்யனார் சிற்பம் "மாறன் குவாவன்" பற்றிய கல்வெட்டு கூறுகிறது.
4)நார்த்தாமலை சாத்தன் பூதி மன்னர் குவாவன் சாத்தன் மகனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
5)புதுக்கோட்டை சேமுத்தப்பட்டி குமிழிதூம்பு கல்வெட்டில் "குவாவ நக்கன்" என்று குறிப்பிடுவதும் குவாவன் என்ற பெயர்கொண்ட முத்தரையர் அரச மரபில் வந்தவராகவே இருக்கவேண்டும்.
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் முத்தரையர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் அந்த காலகட்டத்தில் முத்தரையர்கள் சிறு நாடுகளின் தலைவர்களாகவும்,படை தளபதிகளாகவும் மாற்றம் பெற்ற காலமாகும்.
இது போன்று பல கல்வெட்டுகள் "குவாவன்" முத்தரையர் அரச மரபினர்கள் மட்டும் இப்பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தது.
இங்ஙனம்
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்