|

கண்ணப்பர் நாயனார்

Jun 06, 2024

வலையமார்களின் தனிச்சிறப்பு:

                 இவர்கள் ஆதி குடி தொழிலாக முத்துகுளித்து மின்பிடித்தல், வளரி ஆயுதம் கண்டு போர்புரிதல், போர்கள சத்ரியவேட்டை, மிருக வேட்டை போன்றவற்றை வேட்டையாடி வீரத்தை உலகிற்கு கற்றுதந்தவர்கள். அவ் வேட்டையாடுவதை தம்குல காவல்கார தெய்வங்களுக்கு படைத்து வழிபட்டும் வந்துள்ளனர். மேலும் வேட்டையையும், தெய்வ வழிப்பாட்டையும் அடிப்படையாக கொண்டவர்கள் வலையர்கள் என்பதற்கு சான்றாக வலையர் குலத்தில் பிறந்த திண்ணன் என்னும் கண்ணப்ப நாயனார் திகழ்கிறார். "கண்ணப்பகுல வலையர்" என்ற பட்டத்திலும் முத்தரையர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

சிவனுக்கே கண்கொடுத்த வம்சம் என்ற பெருமையும் வலையர் மக்களுக்கே..! ஆயுதம் தரித்து போர்களத்தில் வளரி , வேல்கம்பு எரிந்து வளரியான் என்று காவல்காரனாய் போற்றப்பட்டதும் வளையர்களே.!

  "வலையர்" குலத்தினர் வேட்டை, தெய்வ வழிபாடு, அரசாட்சி நடத்துவது என அனைத்திலும் திறமை பெற்றவர்களாவார். அதன் அடிப்படையில் இவர்களின் அப்போதைய வீர செயல்களுக்கு ஏற்பவும், இடத்திற்க்கு ஏற்ப  பட்டபெயரிட்டு உலகம் முழுவதும் பரவி கடல் போல வாழ்ந்து வருகின்றனர். "வலையர்" என்ற சாதிய பட்டத்திலேயே தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட 12 மாவட்டங்களில் பெரும்பாண்மையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த மன்னர்குல மாணிக்கங்கள்.

பண்டைய காலத்திலே வலையர் குல மன்னர்களில் பரம்பு மலையை தலைமையாக கொண்டு பாரி வள்ளல் மன்னரும்,  கொல்லிமலையை வள்ளல் வல்வில் ஓரி போன்ற  மன்னர்கள் சிறந்த ஆட்சி நடத்தி கொடை வள்ளல்களாக புகழ்பெற்றார்கள்.

மேலும் முத்தரைய வலையர் குலத்தில் பிறந்த கரிகால் சோழன் மரபினராக மக்கள் நலன்காத்து, பிற்கால சோழர்கள்  என புதிய அடையாளத்துடன் ஆட்சி செய்தனர்.
 ஆறாம் நூற்றாண்டுகளில் முத்தரையர், மூத்த அரையர் என்று அடையாளப்படுதினர்.
அதன் பின் பாளையக்காரராகவும், ஜமீன், மிராஸ், அம்பலகாரர், அம்பலம், மூப்பனார், மூப்பர், சோழ மூப்பர், பஞ்சாயத்து நாட்டார் (நாட்டாண்மை), காவல்காரர், சேர்வை, பூசாரி போன்று வருடங்கள் மாற மாற புதிய புதிய வரலாறுகளையும் படைத்து அதற்கேற்ப பெருமைமிகு பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us