Saamundi Devi
Jun 07, 2024
#சாமுண்டீஸ்வரி..!!
#ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய #பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே. சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே. தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து #தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார். மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். இவருக்குப் பத்துக்கரங்கள் காணப்படும். வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை, அங்குசம், வாள் என்பனவும், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப் பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது.
அமைவிடம்: #பட்டடக்கல், கர்நாடக மாநிலம்.
நன்றி: திரு. பராந்தகன் தமிழ்ச்செல்வன் Sir.