|

மூவேந்தர் வரலாறு

Jun 24, 2024

தமிழக நிலப்பரப்பு, இலங்கை மற்றும் தமிழகதின் மேலே வடக்கே உள்ள நிலப்பரப்பு என பெரும் நிலப்பரப்பை ஆண்டவர்கள், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள்.

இதுல சேர, சோழ, பாண்டியர்களை நாம மூவேந்தர்கள்ன்னு சொல்றோம்.

காரணம், அவங்க தாய் மொழி தமிழ்.

பல்லவர்கள் ஆட்சி பண்ணது 275 CE லேர்ந்து 897 CE  வரைக்கும். காஞ்சி தலைநகரம்.

ரொம்பவே குறுகிய காலம் ஆட்சி பண்ண வம்சம்ன்னா அது பல்லவர்கள்தான்.

இவர்களை ஏன் மூவேந்தர்களோடு சேர்க்கலைன்னா இவங்க தாய் மொழி ப்ரக்ருதி எனும் சம்ஸ்கிருதத்தை மூலம் வெச்சு உருவான மொழி.

தமிழ் தாய் மொழி இல்லைன்றதால பல்லவர்களை நாம தமிழ் மன்னர்கள் வம்சத்தில் சேர்கலை.

பல்லவர்களின் பங்களிப்பு ஆர்ட், ஆர்கிடெக்‌சர்ன்னு நிறைய. பல்லவர்களை பத்தி பின்பு விரிவா பாக்கலாம்.

இப்போ மூவேந்தர்கள் பத்தி பாக்கலாம்.

சேரர்கள் வம்சம் 200 BCE இல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இவர்கள் சங்க காலத்தில் வாஞ்சி எனும் தலைநகரத்திலும் ( இது எந்த ஊர்ன்ற குழப்பம் இன்னும் இருக்கு) அப்புறமா கரூரை தலைகரமா கொண்டு கொங்கு மற்றும் இன்றைய கேரள நிலப்பரப்பை ஆண்டார்கள்.

12ஆம் நூற்றாண்டு வரை சேரர்கள் ஆட்சியில் இருந்தார்கள்.

பாண்டியர்கள் சுமார் 275 BCE லேர்ந்து (இது வரைக்கும் தான் ஆதாரம் கிடைச்சிருக்கு)  1618 CE வரைக்கும் ஆளறாங்க. சில காலங்கள் பலம் வாய்ந்த மன்னர்களாவும், சில காலங்கள் கப்பம் கட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

முற்கால பாண்டியர்கள் கொற்கை நகரத்தை தலைமையிடமாக கொண்டிருந்தார்கள், அப்புறம் மதுரை, இறுதியில் தென்காசியை தலைமையிடமா கொண்டிருந்தாங்க.

சோழர்கள் 273 BCE ல ஆரம்பிக்கிறாங்க, அசோகர் கால கல்வெட்டில் சோழர்கள் பத்தி குறிப்பு வருது. இதுவே நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம். நிச்சயமா இன்னுமே சேர சோழ பாண்டியர்கள் பின்னோக்கி போவாங்க.

இவர்கள் காவிரி ஆற்றை ஒட்டியே தங்களுடைய தலைமை இடங்களை அமைத்துக்கொண்டார்கள். 

1279 வரை சோழ வம்சம் இருந்தது.

இதில் முக்கியமான விஷயம் என்னன்னா சேர, சோழ வம்சத்தை முடித்து வெச்சது பாண்டியர்கள்.

நேத்து போஸ்ட்ல பாத்த சடையவர்ம சுந்தர பாண்டியன் 1.

இம்மூன்று வம்சங்களுமே இந்த நிலப்பரப்பை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செஞ்சு இருக்காங்க.

இன்னிக்கு நாம பாக்கும் கோவில்கள், படிக்கும் இலக்கியங்கள் அவங்க நமக்கு குடுத்த கொடை.

மேலும் ஆழமா போய் இந்த மூன்று வம்சம் மற்றும் பல்லவ வம்சத்தையும் தெரிந்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை.

வாங்க கொற்க்கைக்குள்ள நுழைவோம்.....

தொடரும்....


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us