|

அரங்கநாதர் திருவடி போற்றி !

Jul 06, 2024

1.ஸ்ரீ ரங்கராஜனை ராஜாவாக வைத்து அனுபவம்

2.அரங்கனை “சிந்தாமணிமிவ என்றதற்குச்சேர ரத்னமாகஅனுபவித்தல்

3.ஸ்ரீ ரங்கராஜ ப்ருங்கம் – அரங்கன் வண்டெனத்தகுவன்

4.ரங்கசந்த்ரமா– அரங்கனுக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தங்கள்

5.உத்புல்லபங்கஜதடாகமிவ – அரங்கனுக்கும் தாமரைத்தடாகத்திற்கும்உள்ள ஒப்புமை

6.ஸ்ரீரங்கபாரிஜாதம் – அரங்கனைக் கற்பக விருக்ஷமாகபாவித்திருத்தல்

7.ஜலதிமிவ நிபீதம் – அரங்கன் கடல் போன்றவன்

8.அப்தௌ நிஹிதம் அத்ரிமிவ – பச்சை மாமலை போல் மேனி

9.ஸ்ரீரங்ககுஞ்சர: ஸ்ரீ ரங்கநாத மத்த கஜம் – ஸ்ரீ ரங்கனாதனுடன்யானைக்கு ஒப்பு

10.அத்ரௌ சயாலுரிவ சீதலகாளமேக –என்னும்படி அரங்கனுக்கும்மேகத்துக்கும் உள்ள ஒப்புமை

மேன்மைக்குத் துணையானவை, உலகத் தோற்றத்திற்கு உதவுபவை,
அடியாரை உய்விக்க அமைந்தவை என இறைவனுக்குரிய பண்புகளை
மூவகையாகக் கூறுவர். 
மேன்மைக்குத் துணையானவை :
 எம்பெருமானைச் சேரவேண்டுமென்று முக்தி ஒன்றையே குறிக்கோளாக்
கொண்ட பக்தன் அடையக்கூடிய “பரத்வ” நிலையான அமர்ந்த திருக்கோலம்.
 உலகத்தோற்றத்திற்கு உதவுபவை :
தன்னை வியூகப்படுத்தி திருப்பாற்கடலில் எழுந்தருளி அபயக் குரல் கேட்கும் போதெல்லாம் ஆதரவளிக்கும் சயன திருக்கோலம். 
(பிரம்மனும்
உலகைப் படைக்கும் முன் சயன திருக்கோலத்திய பெருமானைத் தரிசித்த பின்பே உலகு படைக்கலுற்றான் என்பர்) 
அடியாரை உய்விக்க அமைந்தவை 
     இதுவே விபவ அவதாரமாகவும், அர்ச்சாவதாரமாகவும்,
அந்தர்யாமியாகவும் இருந்து உலகு நடைபெற பக்தர்கட்கு அருளும் நின்ற
திருக்கோலம். 

   இந்த மூன்று குணங்கள் வைணவத்தில் எம்பெருமானின் கல்யாண குணங்களாச் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின் பண்புகளைத்தான் 
     சௌல்ப்யம் - எளிமை 
     சௌசீல்யம் - நீர்மை 
     ஆர்ஜவம் - செம்மை 
     வாத்ஸல்யம் - பரிவு 
     சுவாமித்வம் - தலைமை என்றனர்.

விஷ்ணு என்ற சொல்லுக்கு 

     1) எங்கும் நிறைந்தவர் 2) நன்மை தருபவர் 
     3) மாயையிலிருந்து அகற்றுபவர் 
     4) எல்லாப் பொருள்களின் உயிர்நாடியாயிருப்பவர். 

     என நான்கு பொருள் உண்டு. இப்பேர்ப்பட்ட விஷ்ணுவே
அனைத்திற்கும் பிறப்பிடம் என்பது கீதையின் வாக்கு. 

ஆதிதேவனாக
விளங்கும் இந்த மகாவிஷ்ணுவை நீரில் புஷ்பங்களால் அர்ச்சித்தும், 
அக்னியை ஆகுதி செய்தும், மனதினால், தியானம் செய்தும், சூரியனை 
நோக்கி மந்திரங்களை உச்சரித்தும், 
சிலா ரூபங்களையும் வரைபடங்களையும்
பிம்பங்களையும், வைத்துப் பூஜித்து வழிபடலாமென பாகவத 
புராணங்கூறுகிறது. 

The Lord Vishnu, graces his worshippers as the Lord Ranganatha laying on Adhi Sesha (coiled serpent). 

What is unique about this particular statue is that Brahma is missing from the usual lotus arising from the Lord’s navel.

 It is believed that Lord Brahma worships the Lord just before sunrise each day. 

The Lord Vishnu is said to be Protector of the created Universe and a loving God who descends from the Heavens, as avatars, when his worshippers are in peril and dharma is losing.

 Other names of Ranganatha are Periya Perumal, Nam Perumal, Azhagiya Manavalan.

There are also sub shrines for Vishvaksena, Rama, Krishna, Nachiyar, Chakratalvar, Garuda, Hanuman, Andal, and for all the Alwars and Acharyas upto Vedanta Desika within the premises.

     வைணவ மார்க்கத்தில் அடிப்படையான கொள்கை அந்த
பரமாத்மாவாகிற விஷ்ணு 
உலகம் முழுவதும் வியாபித்து நிற்பதனால் உலகம்,
அதனுள் அடங்கிய சகல வஸ்துக்களும் அவனுடைய சரீரமாகிறதென்பதுவும்,
அவனே அந்த சரீரத்திற்கு ஆன்மாவாகவும் இருக்கிறான் என்பதாகும்.

அதாவது பரமாத்மா ஆன்மா என்றால் ஜீவாத்மாக்கள் அவனையே
சார்ந்திருக்கின்ற சரீரமாகின்றன. 
அவன் எஜமானாகின்றான். அவன் சுவாமி.
ஜீவாத்மாக்கள் அவனுடைய சொத்துக்கள். அவன்தான் நம்மைப் பேணிப் பாதுகாக்கின்றவன்.

 நாம் அவனையே சார்ந்திருக்கின்ற, அவனால் காப்பாற்றப்படுகின்ற பத்தினியாக - பெண்ணாக ஆகிறோம்.

 புருஷன் என்ற சொல் வேண்டியதைக் கொடுக்கிறவன் என்ற பொருளைத் தருகிறது.

 (லட்சுமி தேவிதான்அந்த பரந்தாமனின் பத்னி) 

ஜீவாத்மாக்கள் இந்த லட்சுமியின்
மனோபாவத்தை அடையும்போது 
அந்தப் பரமாத்மாவாகிற எம்பெருமான்
தானே இரட்சிக்கத் தொடங்குகிறான். 
இது அவன் கடமையுமாகிறது. அதுவே
ஜீவாத்மாக்களின் முக்திக்கு வழிகாட்டியாகிவிடுகிறது.

தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது
மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து
வந்தனர். 

1875 இல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஏழாம் எட்வர்டு இத்திருக்கோவிலுக்கு ஒரு மிகப் பெரிய பொற்குவளையை 
அளித்தார். அது இக்கோவிலின் கருவூலப் பொருட்களில் இன்றும் உள்ளது. 

     1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கோவில்களும், சமய
நிறுவனங்களும் புதிய சட்ட அமைப்பின் கீழ்வந்து நம்மவர்களாலேயே
நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 

     1966 இல் அமெரிக்காவின் யுனெஸ்கோ நிறுவனம் இக்கோவிலுக்கு
தொழல் நுட்ப உதவி அளிக்க ஒரு நிபுணரை அனுப்பியது. 1968 இல் மேலும் இருவரை அனுப்பியது. 

     இவ்வாறு இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகத் தோரனைவருக்கும்
பொதுவான செல்வமாகி விட்டார் நம் திருவரங்கச் செல்வர். இவ்வுரிமையை உறுதிசெய்வதுபோல் 1987இல் அரங்கனுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரத்தை ஜீயர் ஸ்வாமிகள் அமைத்துக்கொடுத்து விட்டார். 

     ஆம் திருவரங்கத்து இன்னமுது, வைணவர்களுக்கு மட்டுமன்றி,
இந்துக்களுக்கு மட்டுமன்று, உலகத்தின் அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு
தனிச் சொத்து. அதுதான் வைணவ சம்பிரதாயமும் ஆகும். அதனால் தான்
ஆண்டாளும் “வையத்து வாழ்வீர்காள்” என்று வையத்து மாந்தரையெல்லாம்
விளித்தார்.🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us