|

வல்வில் ஒரி

Jul 15, 2024

சங்க காலத்தில் கொடையில் சிறந்தவர்களில் பேகன், பாரி, காரி, ஆய்அண்டிரன், அதியமான், நள்ளி மற்றும் ஓரி ஆகிய கடையேழு வள்ளல்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் #வேட்டுகவுண்டர் என்று சொல்லக்கூடிய முத்தரையர் சகோதர இனம் வேட்டுவகவுண்டர் இன மன்னர்  #வல்வில்_ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் சிறந்த விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் என குறிப்பிடப்படும் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலும், பத்துப்பாட்டு நூலான சிறுபாணாற்றுப்படையிலும் ஏராளமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் கடந்த 1975-ம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் ஓரி மன்னன் குதிரை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி 18-ம் தேதி வல்வில் ஓரி மன்னனுக்கு இரு தினங்கள் அரசு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் வில்வித்தையில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் வில்வித்தை போட்டி நடத்தப்படுகிறது. இதுபோல், பாரம்பரிய நடனங்களும் நடத்தப்படுகின்றன.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் பொருந்திய வல்வில் ஓரி மன்னனுக்கு அவர் ஆட்சி செய்த கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையில் பெரிய மலையாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரம் கொண்ட கொல்லிமலை 441.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஏராளமான மூலிகை வளம் கொண்ட இந்த மலையில் 
#வளப்பூர்_நாடு #வாழவந்தி_நாடு #திண்ணனூர்_நாடு #சேலூர்_நாடு
#அரியூர்_நாடு
#குண்டூர்_நாடு #தேவானூர்_நாடு #குண்டுனி_நாடு #ஆலந்தூர்_நாடு #திருப்புலி_நாடு 
#எடப்புலி_நாடு
#சித்தூர்_நாடு
#பைல்_நாடு
#பெரக்கரை_நாடு 
(ஒரு நாடு என்பது ஒரு கிராம ஊராட்சியை குறிக்கும்) என 14 நாடுகள் உள்ளன. இந்த 14 நாடுகளையும் உள்ளடக்கிய கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்தவர்தான் வேட்டுவகவுண்டர் இன மன்னர் வல்வில் ஓரி.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us