முத்தரையர் குல புகழ் சோழ நாயனார்
Jul 26, 2024
*புகழ்ச்சோழ நாயனார் முத்தரையர் குரு பூசை நாள் 29-7-2024, திங்கள்கிழமை*
திருச்சி,உறையூர் பஞ்சவர்ண சாமி கோயில்* !!🙏
🔥
*அனைவரும் வாருங்கள் முத்தரையர் குல புகழ் சோழ நாயனார் குரு பூசை வழிபாடிற்க்கு*
🙏
புகழ்ச்சோழ நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழ நாட்டை ஆண்ட புகழ்ச்சோழ நாயனார் சிவனை தன் சிந்தையில் வைத்து அறநெறி தவறாமல் அரசாண்டு வந்தார். வீரத்திலும், பிறருக்கு உதவி செய்வதிலும் சிறந்தவரான புகழ்ச்சோழ நாயனார் தனது நாட்டில் சைவம் தழைக்கப் பாடுபட்டவர். சிவபெருமானிடத்து பக்தி கொண்டு தொழுது வந்தார். சிவனடியார்களிடமும் அன்பும் பக்தியும் கொண்டிருந்ததோடு சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் செய்வதையும் தொண்டாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாட்டின் மீது படை எடுத்து வென்று வந்தபோது அவர் படைகள் பகைவர்களின் தலைகளைக் கொணர்ந்தனர். அதில் ஒரு தலை சடாமுடி தரித்திருந்ததைக் கண்ட நாயனார் ஒரு சிவனடியாருக்குத் தீங்கிழைத்துவிட்டோம் எனச் சொல்லி மனம் நொந்து தீப்புகுந்தவர்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில்
“பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்” என்று புகழ்கிறார்.
🙏
உறையூரை அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழ நாயனார்:
சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூரில் முத்தரையர் சோழர் குடியிலே தோன்றியவர் புகழ்ச்சோழ நாயனா செங்கோலின்வழி நிற்பச் சிவநெறி தழைக்க அரசு புரிந்தார்.
🙏
புகழ்ச்சோழ நாயனார் தம்முடைய படை வலிமையாலும் இறைவனின் திருவருளாலும் பல அரசர்களை வென்று மாமன்னராக விளங்கினார். இதனால் அவருக்குக் கப்பம் (வரி) செலுத்தும் அரசர்கள் பலர் இருந்தனர். புகழ்ச்சோழ நாயனார் சிவன் மேல் பெரும் பக்தியும் பேரன்பும் கொண்டவராக விளங்கினார்.
இவர் சிவபெருமான் மட்டுமல்லாமல் அவர்தம் அடியவர் மீதும் பேரன்பு கொண்டிருந்தார். இதனால் கோயில்களுக்குப் பல திருப்பணிகள் செய்ததோடு, சிவனடியார்களுக்கும் அவர்கள் விரும்பியதைக் கொடுத்து, அவர்களின் குறைகளைப் போக்கி வந்தார். சிவாலயங்களுக்குத் திருப்பணி பல செய்தார். இவர் ஆட்சியிலே சைவம் தழைத்தது.
🙏
தலைநகரைக் கருவூருக்கு மாற்றிய புகழ்ச்சோழ நாயனார்:
புகழ்ச்சோழ நாயனார் கொங்கு நாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களிடம் வரியைப் பெறுவதற்கு வசதியாக தம் தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றிக் கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு திருப்பணிகள் பல செய்து வந்தார்.
ஒரு நாள் சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூக்குடலையைப் பட்டத்து யானை சிதறிய குற்றத்திற்காக அந்த யானையையும், பாகரையும் கொன்று நின்ற எறிபத்த நாயனாரை அடைந்து தம்முடைய உடைவாளைத் தந்து “யானை செய்த குற்றம் என்னையே சேரும். ஆகவே என்னையும் கொல்லும்” என்று எறிபத்த நாயனாரிடம் உறைவாளை வழங்கினார். அப்போது இறைவன் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். யானையும் பாகரும் உயர் பெற்றெழும்படி புகழ்ச்சோழ நாயனார் பத்தியிற்சிறந்து விளங்கினார்.
🔥
சிவபெருமான் திருவிளையாடல்:
புகழ்ச்சோழ நாயனார்!!
🙏
கருவூர் பசுபதீசுவரர் (கரூர்) புகழ்ச்சோழ நாயனார் கொண்ட பக்தியை உலகறியச்செய்ய வேண்டும் என்னும் திருவுளம் கொண்டார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
தமது கீழ் அரசாளும் சிற்றரசனாகிய கப்பமாக(வரி) குதிரைகள், யானைகள், பொற்குவியல்கள், விலை மதிக்கத்தக்கக் கற்கள் போன்றவற்றைச் செலுத்தி வந்தார்கள். அந்த பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார். ஒரு சமயம் மலைநாட்டு மன்னனான அதிகன் என்பவன் புகழ்ச்சோழ நாயனாருக்குக் கப்பம் செலுத்தவில்லை. இதனை அமைச்சர்கள் வாயிலாக அறிந்த புகழ்ச்சோழ நாயனார் அதிகனின் மீது பெரும் படைகளைக் கொண்டு போர் தொடுக்கச் சொன்னார். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரை ஆகியவற்றோடு தங்களால் அழிக்கப்பட்ட எதிரிகளின் தலைகளையும் சேகரித்துக் கொண்டு வந்து மன்னர் முன்னால் சமர்ப்பித்தனர். அவ்வாறு கொண்டு வந்த குவியல்களுக்கு மத்தியில் சடாமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்ட புகழ்ச்சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. கண்ணீர் சொரிய அழுது, தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகா இது… என்று தம்மை இகழ்ந்து கொண்டார். நான் அரசாட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டேன் என்று புலம்பி, அமைச்சர்களை நோக்கி, "இந்நாட்டை ஆளுமாறும், சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என்னுடைய மகனுக்கு முடிசூட்டுங்கள்” என்று அமைச்சர்களை நோக்கிக் கூறினார். தமக்குச் சேர்ந்த சிவாபராதமாகிய பழிக்குத் தீர்வு தாமே காரணமாகி அக்கினியை வளர்ப்பித்தார். உடம்பு முழுதும் திருநீறு பூசிக்கொண்டு, திருச்சடையையுடைய தலையை பொற்தட்டில் கிடத்தி தலைமேல் அத்தட்டைச் சுமந்து கொண்டு திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டு அக்கினியை வலம் வந்து மகிழ்ச்சியுடன் அக்னி பிழம்பினுள் இறங்கினார். வானில் இருந்து மலர் மழை பெய்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச்சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்து முக்தி அடைந்தார்.
🙏
குருபூஜை நாள்:
புகழ்ச்சோழ நாயனார்!!
*செங்கோலின்வழி நிற்பச் சிவநெறி தழைக்க அரசு புரிந்து,பகைவர்களின் தலைகளில் ஒரு தலை சடாமுடி தரித்திருந்ததைக் கண்டு ஒரு சிவனடியாருக்குத் தீங்கிழைத்துவிட்டோம் எனச் சொல்லி மனம் நொந்து தீப்புகுந்த புகழ்ச்சோழ நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை
நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான திருச்சி மாவட்டம் உறையூர்* (தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது) அ/மி பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலிலும் *(திருச்சியின் ஒரு பகுதியே இந்த உறையூர் ஆதலால் திருச்சியின் எந்த பகுதியில் இருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம்* உறையூரில் கடைவீதி தெருவில் இக்கோயில் உள்ளது) முக்தியடைந்த ஸ்தலமும் ஆன
கரூர் மாவட்டம் கருவூர் அ/மி பசுபதீஸ்வரர் திருக்கோயிலும்
(கரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம் திருச்சி – ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.
*பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலில் புகழ்ச்சோழ நாயனாருக்குத் தனி சந்நிதி உள்ளது.
கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூணில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு
உள்ள சிலை அமைந்துள்ளது*.
இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்*.
🙏
புகழ்ச்சோழ நாயனார்!!
🔥
"திருச்சிற்றம்பலம்"
🙏
www.araiyarsuvaranmaran.com