நீர் மேலாண்மையில் சக்கரவர்த்தி கரிகாலன்
Jul 27, 2024
#கல்லணை
பழம் தமிழரின் கட்டுமானப்பணி சிறப்பிற்கு சான்றாக கல்லணை இருந்து வருகிறது. முதலாம் நூற்றாண்டில் கரிகால் பெருவளத்தான் என்று சொல்லப்படும் கரிகால் சோழனால் காவிரி ஆற்றின் வேகத்தை குறைக்கவும் விவசாயத்திற்காக தண்ணீரை சேகரிக்கவும் தடுப்பணை கட்டப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை உலகில் உள்ள மிக பழமையானா பெரிய அணைகளில் இரண்டாவதாக உள்ளதோடும் இன்று வரை செயல்பாட்டில் பயன்பாட்டில் உள்ள சிறப்பை பெற்றுள்ளது.
காவிரி ஆற்றின் பாதையின் அகலம் குறைந்து வேகம் அதிகரித்து கொள்ளித்தில் இணையும் இடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தோகூர் கோயிலடி என்ற ஊரில் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
1080 அடி நீளமும் 66 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட கல்லணை கருங்கற்பாறைகளை களிமண் பசையினால் சேர்த்து கட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழரால் உருவாக்கப்பட்ட களிமண் பசையின் வேதியியல் கூறுகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாத சிறப்பை பெற்றுள்ளது.
கல்லணைக்கு அடித்தளம் மணலால் உருவாக்கப்பட்டு 12 அடி ஆழத்தில் இருந்து கல்பாறைகளை களிமண்ணால் ஒட்டி ஒன்றின் மீது ஒன்று வைத்து அடிக்கி உருவாக்கப்பட்டு காவிரி ஆற்றின் வேகத்தை குறைக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்லணையின் கட்டிமான அமைப்பு நெளிந்து வளைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆகி உள்ளது.
1839 ஆம் ஆண்டு கல்லணையின் மீது பாலம் கட்டப்பட்டது அதில் இருந்து பார்த்தால் கல்லணையின் மொத்த அழகையையும் கண்டு களிக்கலாம் கல்லணையின் அழகை கண்டு களிக்க பல ஊர்களில் இருந்து மக்கள் வருவதால் கல்லணை சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அறியப்படும் சர். ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாள வல்லுநர் கல்லணையை பல ஆண்டுகள் ஆய்வு செய்து கல்லணை மணலால் மூடப்பட்டு செயல் இழந்து இருந்ததை 1829 சிறு பகுதியாக மணல் போக்கிகளை உருவாக்கி கல்லணையை புதுப்பித்து சீரமைத்து பு கல்லணையின் அடித்தளத்தின் சிறப்பை தழிழரின் கட்டுமான பணியின் சிறப்பை உலகறிய செய்தார்.