ஆன்மீக சேவையில் முத்தரையர் குல பேரரசர்கள்
Jul 29, 2024
முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்....
இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை வெவ்வேறு வழிகளில் மகிழ்வித்து சிவபதவியை அடைந்த சிவபக்தர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.அவர்கள் அறுபத்து மூவர் என சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தில் கூறுகிறார்.அவர்களில் முத்தரையர் குலம் உதித்தவர்கள் .
1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்
2 ) மங்கையர்க்கரசியார்
3 ) நரசிங்க முனையரைய நாயனார்
4 ) மெய்ப்பொருள் நாயனார்
5 ) கண்ணப்ப நாயனார் ( நாம் அனைவரும் அறிந்த ஒருவர் )
1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்
இவர் இரண்டாம் பெரும்பிடுகு என்று அழைக்கப்பட்ட சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தந்தை.
2 ) மங்கையர்க்கரசியார்
இவர் குவாவனின் மகளும். சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தங்கையும் ஆவார். இவர் நின்ற சீர் நெடுமாற நாயனார் என அழைக்கப்பட்ட கூன் பாண்டியனின் மனைவி.
3 ) நரசிங்க முனையரைய நாயனார்
இவர் திருமுனைப்பாடி நாட்டை திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் தந்தை வாணகோ அரையர் எனப்படும் தெய்வீகன் ஆவார். இவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதிநாட்டை ஆண்டு வந்த மெய்ப்பொருள் நாயனாரின் அண்ணன் .மெய்ப்பொருள் நாயனார் வாணகோ முத்தரையரின் சிற்றப்பா ஆவார்.
4 ) மெய்ப்பொருள் நாயனார்.
இவர் சேதி நாட்டையும் ,மேற்க்காவலூர் நாட்டையும் ஒரு சேர ஆண்டு வந்தார். இவர் பக்தரானாலும் போர்கள் பல செய்து வெற்றிகளைக் கண்டவர்.
5.கண்ணப்ப நாயனார்
இவரைப்பற்றி நாம் அறிந்ததே.
தகவல் குறிப்பு தந்து உதவியவர் :
வரலாற்று ஆய்வாளர் உயர்திரு
ஐயா.திருமலை நம்பி .புதுக்கோட்டை.
#மீள்பதிவு