|

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆன்மீக வரலாற்றில் முத்தரையர் குல நந்த சோழன்

Aug 18, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்ட  ஆன்மீக சேவையில் முத்தரையர் குல நந்த சோழன் ...........

இப்போது நாம் தரிசிக்கும் உறையூர் திருத்தலம் இங்கேயே
நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது ஆலயம்!

இது என்ன விசித்திரம்? உறையூரைத் தலைநகராகக்
கொண்டு சோழ நாட்டை ஆண்டுவந்தான்
நந்த சோழன். தினமும் ஸ்ரீரங்கம் சென்று
ரங்கநாதரை தரிசித்த பிறகுதான் தன்னுடைய
அன்றைய முதல் உணவையும் அரசு அலுவல்களையும்
மேற்கொள்வான். தனக்காக அன்றி தன்
நாட்டு மக்கள் நலனுக்காகவே அவன் இவ்வாறு
அரங்கனை தினமும் சேவிக்கும் வழக்கம்
கொண்டிருந்தான் என்றே
சொல்லலாம். இல்லாவிட்டால்,
எல்லா வளங்களும் நல் குடிமக்களும்
கொண்ட அந்த அரசன், வாரிசு
இல்லாத தன் குறையைப் போக்குமாறு அரங்கனிடம்
வேண்டிக் கொள்ளத் தயங்குவானா?
ஆனால், தாய்மை பேறுக் காக ஏங்கும் அவனது
மனைவியால் பொறுமை காக்க முடியுமா?
நாள் தவறாமல் தன் கணவர் அரங்கனை வழிபட்டு
வருவதும் அந்த நாட்கள் வரு டங்களை விழுங்குவதும்
ஆனால் தன் வயிறு மட்டும் நிறையாமல் இருப்பதும்
அவள் ஏக்கத்தை அதிகரிக்கச் செய்தன.
பொறுக்கமாட்டாமல் ஒருநாள்
மன்னனிடம், ‘‘எல்லோருக்கும் மழலைச் செல்வம்
தரும் ரங்கன், நமக்கு மட்டும் ஏன் மறுக்கிறார்? பிற
செல்வங்கள்தான் இருக்கிறதே, போதாதா எ
ன்று கேட்கிறாரா? நீங்கள் தினமும் ஸ்ரீரங்கம் போய்
அப்படி என்னதான் வேண்டிக்கொள்கிற
ீர்கள்?’’ என்று குறைபட்டுக் கொண்டாள்.
‘‘அரங்கன் அறியாததா? என்னைப்
பொறுத்தவரை நம் வம்சம் இத்துடன் முடிகிறது
என்று அவன் நினைத்திருக்கிறானோ என்னவோ! பிற
எல்லாவற் றையும் கொடுக்கத் தெரிந்த
அவனுக்கு இது மட்டும் தெரியாதா என்ன?
என்னவோ காரணம், மறுக்கிறான். இதுவும் அவன்
அனுக்ரகம்தான் என்று நாம் அவனடி பணிவதை
மட்டும் செய்து கொண்டிருப்போம்....’’
என்று மனைவியை சமாதானப்படுத்த முயன்றான்
நந்த சோழன். ஆனாலும் அவன் குரலிலும் ஏக்கம்
இழையோடியதைத் தவிர்க்க முடியவில்லை.
அரங்கன் அசைந்து கொடுத்தார். அவனது
இந்த ஜன்மத்தைப் பொறுத்தவரை ஏக்கம்
தீர்த்து வைப்போம் என்று தீர்மானித்துக்
கொண்டார். அவனை வேட்டையாட
கானகத்துக்கு வரச் செய்தார். ஆனால்
அன்றைக்குப் பார்த்து அவன் கண்ணுக்கு எந்த
விலங்கும் தெரியவில்லை; அவனுடைய வில்லுக்கும்
வேலை இல்லாமல் போயிற்று. ‘இப்படி கானகத்துக்கு
வந்து காலத்தை வீணாக்கியதற்கு பதில், ஸ்ரீரங்கம்
சென்று அரங்கனை வழிபட்டு நேரத்தை
உருப்படியாக செலவழித்திருக்கலாம்’ என்று
தனக்குள் சொல்லிக்
கொண்டான்.
அவனுடைய எண்ணத்தை ஆமோதிக்கும் வகையில் ஒரு
பச்சிளங் குழந்தையின் அழுகுரல் கேட்டது. கானகத்தில்
கேட்டறியாத குரலாக இருக் கவே குரல் வந்த திசை
நோக்கி விரைந்தான் மன்னன். அது ஒரு குளம்.
குளத்தின் நடுவே ஒரு தாமரை மலரில் ஒரு சிசு தன்
பிஞ்சுக் கை, கால் களை அசைத்தபடி நந்த சோழனைப்
பார்த்துச் சிரித்தது. உடனே குளத்தில் இறங்கி அந்தக்
குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டான்.
அந்த அணைப்பில்தான், ஒரு தாயின் உள்ளத்தை
அந்தக் கணவனால் புரிந்து கொள்ள
முடிந்தது. குழந்தையை அரவணைக்கும்போது அதற்குத்
தான் பாதுகாப்பாக விளங்க முடியும் என்ற
பெருமை உள்ளத்தை நிறைவித்தது.
உடனே அரண்மனைக்குத் திரும்பினான். குழந்தையைக்
கண்டதும் மகாராணிக்கு மட்டில்லாத மகிழ்ச்சி.
பொங்கும் தாய்மை உவகையுடன் அந்தக்
குழந்தையை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தாள்.
கொஞ்சம் மனவாட்டம்
கொடுத்துக் கொண்டிருந்த ஒரே ஒரு
ஏக்கமும் நிறைவேறிவிட்டதால், அரசன் தன் பணியில்
முற்றிலுமாக நாட்டம் செலுத்தி மக்களுக்கு
மேன்மேலும் பல நன்மைகளைச் செய்து,
செம்மையாக கோலோச்சினான். கமலத்தில்
உதித்தவள் என்பதால், குழந்தைக்கு கமலவல்லி
என்று பெயரிட்டு மகிழ்ந்தான்.
கமலவல்லி சீரும் சிறப்புமாக வளர்ந்தாள்.
மன்னனின் ஏக்கம் தீர்க்க, மாதவனால்
அனுப்பப்பட்ட மகாலட்சுமி தான்தான் என்ற
தன் அவதாரத்தின் காரணத்தை உணர்ந்ததாலோ
என்னவோ, திருமணப் பக்குவத்துக்கு வந்துவிட்ட
அவளுடைய மனம் அரங்கனையே நாடியது. அவளுடைய
விருப்பத் தை அறிந்த நந்த சோழன் திகைத்தான்.
அரங்கனை மணப்பதா? அது எப்படி
சாத்தியமாகும்?
அன்றிரவு அவன் கனவில் தரிசனம் தந்தார்
அரங்கன். ‘‘உன் ஜன்மம் சாபல்யம் அடைய
வேண்டும் என்பதற்காகவே உனக்கு நான் அந்தக்
குழந் தையை அனுப்பி வைத்தேன். அவள் வேறு யாருமல்ல,
என் மகாலட்சுமிதான். ஆகவே அவள் என்னையே
மணமுடிக்க விரும்புவதில் எந்த அதிசய மும் இல்லை.
என் ஆலயத்துக்கு அவளை மணப்பெண்ணாக
அலங்காரம் செய்து அழைத்து வா. நான்
அவளை ஏற்கிறேன்’’ என்று திருவாய் மலர்ந்
தருளினார்.
தனக்கென்று குழந்தை இல்லாத காலத்தில்
இருந்த மனப்பக்குவத்துக்கு மன்னன் திரும்பினான்.
எனக்கு, எனது என்று
சொல்லிக்கொள்ள இந்த உலகில்
எது இருக்கிறது? எல்லாமே அரங்கன்
அளித்தவைதானே! அவற்றை அவனே திரும்ப எடுத்துக்
கொள்வதில் நான் எதற்காகக்
கவலைப்பட வேண்டும்?
சிலகாலம் என் பொறுப்பில்
கொடுத்து வைத்திருந்த பாக்கியத்துக்காக
நான் அவனுக்கு நன்றிதான் சொல்ல
வேண்டும்; அவனைக் குறை சொல்வதில்
அர்த்தமில்லை.... கமலவல்லியை அலங்கார
பூஷிதையாக, பேரழகு மிக்கவளாக, ஏன் அந்த
மகாலட்சுமியாகவே ஜோடனை செய்து
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் சென்றான் நந்த
சோழன். அவன் மனைவி, அரச பரிவாரங்கள், மக்கள்
என உறையூரே இடம் பெயர்ந்து ஸ்ரீரங்கம்
சென்றது! அனைவர் முன்னிலையிலும் கைகளில்
பிடித்த மலர் மாலையுடன், அரங்கனின் கருவறைக்குள்
காலடி எடுத்து வைத்த கமலவல்லி, அப்படியே சிறு
ஒளியாக மாறி, அரங்கன் இத யத்துள்
புகுந்தாள்.
நந்த சோழன் மனத்துறவு பூண்டான். பாசம், பற்று
எல்லாம் குறிப்பிட்ட காலம்வரைதான். தனக்கே
பிறந்தாலும் சரி, தான் எடுத்து வளர்த்தாலும் சரி,
பிரிவுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற
மனித நியாயம் அவனுள் பரிபூரணமாக அமைந்தது.
ஆனாலும், அரங்கனின் கருணையை ஆராதிப்
பதற்காக, உறையூரில் ஒரு ஆலயம் எழுப்பினான்.
அதில் தன் மருமகனான அரங்கனை ‘அழகிய
மணவாளனா’க பிரதிஷ்டை செய்தான். தன்
மகள் கமலவல்லிக்கும் தனி சந்நதி உருவாக்கி
மகிழ்ந்தான். ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை
சேவித்தவர்கள் உறையூர் வந்து அவன் அழகிய
மணவாளனாக எழில் கோலம் தரும் காட்சியையும்
தரிசிக்க ஏற்பாடு செய்தான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நந்த சோழன் உறவு
முறையில் பராந்தக சோழன் என்பவன் உறையூரில்
அரசாட்சி நடத்தினான். அப்போது சாரமா
முனிவர் என்ற மகரிஷி ஒரு நந்தவனம் அமைத்து அதில்
பலவண்ண, வாசம் மிக்க மலர்களைப் பயிரிட்டார்.
அந்த மலர்கள் எல்லாம் முற்றிலும் இறைவனுக்கு
அர்ப்பணிக்கப்படவே என்ற உறுதியோடு, நந்தவனத்தில்
பாடுபட்டார். தினமும் அதிகாலையில் துயில்
எழுந்து, காலைக் கடமைகளை முடித்து நந்த
வனத்தில் புகுந்து மலர்ந்து சிரிக்கும் எல்லா
மலர்களையும் பறித்து அருகே, திருச்சிராப்பள்ளியில்
கோயில் கொண்டிருக்கும் தாயுமானவருக்கு
சாத்தி அழகு பார்ப்பார். இந்த தினசரிப் பணியை
அவர் ஒருநாளும் மறந்ததில்லை.
ஆனால் அவரும் வெகுண்டெழும்
சந்தர்ப்பம் ஒன்று வந்தது. ஒருநாள் வழக்கமாகத்
தனக்கு மலர்களை அள்ளித் தரும் செடிகள்
சொரியும் மலர் கள், எண்ணிக்கையில்
குறைந்தன. தன் நந்தவனத்துக்குள் புகுந்து யார்
தமக்குமுன் வந்து பறித்திருப்பார்கள்? மறுநாள்,
வழக்கத்தைவிட முன்னதாக எழுந்திருந்து
நந்தவனத்துக்குள் நுழைந்து
மறைந்துகொண்டார். யாரோ ஒருவன் உள்ளே
வந்து தம் விருப்பம்போல மலர்களைப் பறிப்பதைக் கண்
டார். கோபம் தலைக்கேற, அப்படியே பாய்ந்து
சென்று அவனைப் பற்றினார். தான்
மலர்களைத் திருடத்தான் வந்ததாகவும் அப்படித்
திருடுவது அந் நாட்டு அரசருக்காக என்றும்
சொல்லி, முனிவரைத் திகைக்க வைத்தான்
அவன்.
குழப்பத்துடன் மன்னனிடமே நேரடியாகச் சென்று
விளக்கம் கேட்ட போது, பராந்தக சோழன்
கொஞ்சமும் தன் செயலுக்காக
வெட்கப் படாமல், ‘என் மகாராணி கர்ப்பம்
தரித்திருக்கிறாள். அவள் விருப்பத்தை நிறை வேற்ற
வேண்டியது என் கடமை. தன் கூந்தலுக்கு உங்கள்
நந்தவனத்து மலர்களை அவள் கேட்டாள். இந்த
அற்ப மலர்களுக்காக நீங்கள் வாதாடுவது
வேடிக்கையாக இருக்கிறது. இவளுக்குத் தந்ததுபோக,
எஞ்சியதை உங்கள் மகாதேவனுக்கு சமர்ப்பியுங்கள்’
என்று முனிவருக்கே உத்தரவிட்டான்!
நொந்துபோனார் சாரமா முனிவர்.
தாயுமானவர் சந்நதி முன் வீழ்ந்து அரற்றினார்.
ஈசன் சினந்தார். முக்கண்ணிலும் கோபம்
தீப்பொறிகளாகத் தெறித் து, அவை
உறையூரை நோக்கிப் பாய்ந்தன. பெருங்காற்று,
மணல் வாரி இறைத்தது. ஒருசில நிமிடங்களில்
மணல் மழையாகப் பொழிந்து ஊரையே
மூழ்கடித்தது. ஈசனால் உருவாக்கப்பட்ட ஒரு கோழி,
மன்னனின் பட்டத்து யானையைத் தன் அலகால்
குத்தி, கால் விரல்களால் பிராண்டி, மிரண்டோ டச்
செய்தது. (இதனாலேயே இந்த ஊருக்கு திருக்கோழி
என்றும் ஒரு பெயர் உண்டு) மகாதேவனின்
கோபம் உறையூரையும் தாண்டிச் சென்று, பிற
பகுதிகளையும் மூடிவிடுமோ என்ற அச்சம் பரவ
ஆரம்பித்தது. இந்த சமயத்தில்
வெக்காளியம்மன் ஊர் நலன் காக்க
முன்வந்தாள்.
உறையூர் எல்லையில் கோயில் கொண்டிருந்த
அவள், இந்த மண் ஊழ், மகேசனின் திருவிளையாடல்
என்பதைப் புரிந்துகொண்டு, ஈசன் முன் போய்
நின்றாள். ‘‘உங்கள் கோபம், அடுத்தடுத்த ஊர்களையும்
தாக்குகிறதே, அதனைத் தாங்கள் தடுத்து நிறுத்தக்
கூடாதா?’’ என்று பணிவுடன் கேட்டாள். ஈசன்
சாந் தமானார். உறையூர், மணல் உறையால்
மூடப்பட்டது. இந்த அழிவிலிருந்து தப்பிய
மகாராணி புவனாமாதேவி, ஒரு ஆண் குழந்தையை
வெக்காளியம்மன் அருளால்
ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையே கரிகால்
சோழன். இவனுக்குப் பிறகு வந்த ஒரு சோழ மன்னன், தம்
மூதாதையர் வாழ்க்கையைப் பிறர் சொல்லக்
கேட்டு, உறையூரில் மீண்டும் அழகிய மணவாளனுக்கு
கோயில் உருவாக்கி, முன்னோரான நந்த சோழனுக்குத்
தன் மரியாதையைக் காணிக்கையாக்கினான்.
இவ்வாறு இவன் உருவாக்கிய கோயில்தான்
இப்போது நாம் காண்பது. மணல் மூடிய கோயிலை
ஒருவேளை அகழ்வாராய்ச்சி செய்தால்
கிடைக்கக் கூடுமோ?
ஸ்ரீரங்கத்தானை தன் பண்ணால் பாடி
மகிழ்வித்து, அதனால் லோகசாரங்க முனிவரால்
தாக்கப்பட்ட திருப்பாணாழ்வார் அவதரித்த
தலம், இந்த உறை யூர். பிறகு அரங்கன் ஆணைப்படி
அதே முனிவரால் தோளில் சுமக்கப்பட்டு அவர்
ஸ்ரீரங்கநாதருடன் இரண்டறக் கலந்ததை
ஏற்கெனவே நாம் படித் தோம். அந்தத்
திருப்பாணாழ்வாருக்கு இந்தக் கோயிலில் தனி
சந்நதி அமைந்துள்ளது. மூலவர் அழகிய மணவாளன்
நின்ற திருக்கோலத்தில் எழில் மிளிர அற்புதமாகக்
காட்சியளிக்கிறார். தன் மனைவியையே பூலோகத்து
மங்கையாக்கி, பின் தானே மணந்தும்
கொண்ட கதைக்கு நாயகனாகத்
திகழ்கிறார்.
நாற்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை, அபயம்
தாங்கியிருக்கிறார். சக்கரம், பிரயோக சக்கரமாக
அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூலவருக்கு
உற்சவ விக்ரகம் இந்தக் கோயிலில் இல்லை.
திருவரங்கப் பெருமாளே இங்கு உற்சவராக
விளங்குகிறார் என்பதை உறுதிப்படுத்திய
ிருக்கிறார்கள். அதனால்தான்
ஒவ்வொரு வருடமும் திருவரங்க உற்சவர்,
இந்த உறையூர் எழுந்த ருளி, கமலவல்லித் தாயாரை
மணம் புரிந்துகொள்ளும் வழக்கத்தை
ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த வழக்கத்தை நந்த
சோழனே உருவாக்கினான் என்று அறியும்போது,
அவனது சிறப்பை உணரமுடிகிறது. இவ்வாறு
அரங்கன் வந்து செல்லும்போதுதான்
ரங்கநாயகித் தாயார் ஊடல் கொண்டு,
ஸ்ரீரங்கக் கோயில் கதவைத் திறக்காமல் பிணக்கு
கொள்வதும் பிறகு, நம்மாழ்வாரும்,
பிறரும் சமாதானம் செய்ய, அரங்கனும்
தன்னை மன்னிக்குமாறு வேண்ட, தாயார்
சாந்தமடையும் நிகழ்ச்சியும் ஒவ்வொரு
வருடமும் நடத்திக் காட்டப்படுகிறது.
கமலவல்லித் தாயார் மூலவராகவும்
உற்சவராகவும் ஜொலிக்கிறார்.
மகாலட்சுமியல்லவா! ஆயில்ய நட்சத்திரத்தில்
பிறந்த பெண்களுக்கு இந்தத் தாயார்
ஆறுதலாகவும் விளங்குகிறார். ஆமாம், ஆயில்ய
நட்சத்திர தினத்தன்றுதான் இவர் நந்த சோழனுக்கு
மகளாகத் தோன்றினாள். ஆகவே, ஆயில்ய
நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்குத்
திருமணமாகாது என்ற வாசகம், இத்தலத்தைப்
பொறுத்தவரை பொய்த்துப்போகும்.
திருமணத்துக்கா கக் காத்திருக்கும் அந்த ஆயில்ய 
நட்சத்திரப் பெண்கள் இந்தத் தாயாரை
உளமாற வணங்கினால், விரைவில், தடைகள்
எல்லாம் அகன்று அவர்களுக்குத் திருமணம் உடனே
நிச்சயமாகிவிடும் என்பது நம்பிக்கை.....

www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us