அறிவியல் தமிழ்
Sep 09, 2024
ஆயக்கலைகள் அன்று தமிழகத்தில் குருகுல பாடமாக இருந்தது..
குருவின் இல்லத்தில் மன்னரின் மகனாக இருந்தாலும் குருகுல வாசம் செய்யவேண்டும் ..
இதில் 31. ஐ படித்துபாருங்கள்..
காலகருவி செய்தல்..
போகர் நிகண்டு, 7000 நூல்களில் விமானம் செய்தற்கான விளக்கமும், உலோகத்தைபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்..
வானவியல் தந்தை மற்றும் இன்றும் இந்திய மருத்துவதுறை தந்தையாக கொண்டாடுவது யார் என படித்தாவது தெரிந்துகொள்ளுங்கள்..
வானிலே உலாவருகின்ற பலவகையான பொருட்கள் பற்றி முற்காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த அறிவு பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் மற்றும் சங்கம் மருவியகால நூல்களிலே கிடைக்கின்றன. சூரியன், சந்திரன் ஆகியவை வானில் மிகத் துலக்கமாகத் தெரிபவை. இயற்கையின் இயக்கத்தில் மிகத் தெளிவான பங்கு வகிப்பவை. இதனால் இவற்றின் இருப்புப் பற்றிய அறிவும், அவற்றின் குணநலன்கள் பற்றிய அறிவும் நீண்டகாலமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. மிகமுந்திய தமிழ் இலக்கியங்களிலே இவை பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களும் இப்பாடல்களிலே காணப்படுகின்றன. செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர். மேலும் இக்கோளினை செம்மீன், அழல் எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் படிமகன் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. புதிதாக கண்டறிந்தத கோள் புதன் என அழைக்கப்பட்டது...இதே பரிபாடல் புதன் கோளைப் புந்தி என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு அறிவன் என்ற பெயரும் உண்டு."வியா" என்றால் பெரிய என்ற பொருள். தேவர்களுக்குக் குரு என்று கருதப்பட்ட வியாழனைத் தமிழ்ப் பாடல்கள் அந்தணன் என்கின்றன. சூரிய, சந்திரர்களுக்கு அடுத்தபடியாக வானிலே துலக்கமாகத் தெரியும் வெள்ளி, பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும் வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன் போன்ற பெயர்களிலும் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம்.இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது. சனிக்கோள் கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள் எனவும் மைம்மீன் எனவும் வழங்கப்பட்டது. இப்பெயர் புறநானூற்றுப் பாடலொன்றில் இடம் பெற்றுள்ளது.
போதுமென நினைக்கிறேன்..
இன்னும் நான் எழுதினால் உங்களுக்கு புரியாது.. ஆகவே
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் குருகுலவாசம் அழிக்கப்பட்டது..
உதாரணத்திற்கு தமிழனின் ஆயுதம் வளரி.. அதைப்பற்றி சினிமாவில் பார்த்திருப்பீர்கள் அதனால் விளக்க வேண்டியதில்லை.. ஆங்கிலேயர் அதை உபயோகப்படுத்தினால் மரணதண்டனை என கொண்டுவந்தார்கள்.. இதுபோல் நிறையகலைகள் அழிந்தன..
சிலம்பம், வர்மக்கலை போல்..
இது வேகமான உலகம்..
அசோகர் மரம் நட்டார்.. குளம் வெட்டினார் என படித்து பணிசெய்யும் கூமுட்டைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..
ஏண்டா! படித்ததை சொன்னதும், நம் புராண இலக்கியங்களை மேற்கோள் காட்டியதும் குற்றமா?
கருடபுராணம் படித்துபாருங்கள்..
தவறுசெய்தால் பயம் வரும்..
தவறுசெய்ய தோணாது..
மூன்றாம் தலைமுறைக்கு பேம்பர்ஸ் மாற்ற துடிக்கும் அரசியல்ஞானிகள் உணர்ந்திட வாய்ப்பில்லை..
நம் தாய்மொழி தமிழ்..
அதன் மேல் காதல் கொண்டால் தேனாக இனிக்கும்..
தேவாரமும், திருவாசகமும் படியுங்கள்..
எவனாவது இராமாயணம் என்று கேள்விகேட்டு வராதீர்கள்.. அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் மட்டுமே ..
இதற்கு மேல் என்னால் விளக்கஇயலவில்லை..
விரைவில் திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைக்கலாம் என்று இருக்கிறேன்.. 😂
200 ரூ உ. .பி
சந்தேகங்களை அங்குவந்து தட்சணையோடு கேளுங்கள்..
64 கலைகள் பின்வருமாறு:
1. ஆடல்
2. இசைக்கருவி மீட்டல்
3. ஒப்பனை செய்தல்
4. சிற்பம் வடித்தல்
5. பூத்தொடுத்தல்
6. சூதாடல்
7. சுரதம் அறிதல்
8. தேனும் கள்ளும் சேகரித்தல்
9. நரம்பு மருத்துவம்
10. சமைத்தல்
11. கனி உற்பத்தி செய்தல்
12. கல்லும் பொன்னும் பிளத்தல்
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்
15. கலவை உலோகம் பிரித்தல்
16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17. உப்பு உண்டாக்குதல்
18. வாள் எறிதல்
19. மற்போர் புரிதல்
20. அம்பு தொடுத்தல்
21. படை அணிவகுத்தல்
22. முப்படைகளை முறைப்படுத்தல்
23. தெய்வங்களை மகிழ்வித்தல்
24. தேரோட்டல்
25. மட்கலம் செய்தல்
26. மரக்கலம் செய்தல்
27. பொற்கலம் செய்தல்
28. வெள்ளிக்கலம் செய்தல்
29. ஓவியம் வரைதல்
30. நிலச்சமன் செய்தல்
31. காலக் கருவி செய்தல்
32. ஆடைக்கு நிறமூட்டல்
33. எந்திரம் இயற்றல்
34. தோணி கட்டல்
35. நூல் நூற்றல்
36. ஆடை நெய்தல்
37. சாணை பிடித்தல்
38. பொன்னின் மாற்று அறிதல்
39. செயற்கை பொன் செய்தல்
40. பொன்னாபரணம் செய்தல்
41. பொன் முலாமிடுதல்
42. தோல் பதனிடுதல்
43. மிருகத் தோல் உரித்தல்
44. பால் கறந்து நெய்யுருக்கல்
45. தையல்
46. நீச்சல்
47. இல்லத் தூய்மையுறுத்தல்
48. துவைத்தல்
49. மயிர் களைதல்
50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்
51. உழுதல்
52. மரம் ஏறுதல்
53. பணிவிடை செய்தல்
54. மூங்கில் முடைதல்
55. பாத்திரம் வார்த்தல்
56. நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
57. இரும்பாயுதம் செய்தல்
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
59. குழந்தை வளர்ப்பு
60. தவறினைத் தண்டித்தல்
61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64. வெளிப்படுத்தும் நிதானம்..
எனக்கு இன்று நேரமிருந்ததால் இதை எழுத வாய்ப்புகிடைத்தது.. வருவேன்.. தவறு என எனக்கு எதைப்பற்றி தோணினாலும் மீண்டும் எழுத வருவேன்..