பெருமாள் திருவடி
Sep 18, 2024
ஸ்ரீ ரங்கம் பெருமாளுக்கு அணிவிக்கப்படும் பாதுகைகள்…
இந்த படங்களில் உள்ள காலணிகளுக்கு, பூ வைத்து உள்ள காரணம் தெரியுமா? ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள, பெரிய பெருமாள் அணிந்துகொண்டு, தேய்மானத்திற்கு பின், கழட்டி வைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம், திருக்கொட்டாரம் எனும் இடத்தில், தூணில் மாட்டி வைக்கப்படும். புதிய, பாதணிகள் செய்ய, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரத்யோக, பாதணிகள் அரங்கனுக்காக, செய்பவர்கள் இருக்கிறார்கள். வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்ய கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். பாதணிகள் தனித்தனியாக, செய்வார்கள். 48 நாட்கள், உணவு கட்டுப்பாடு இருந்து, விரதம் மேற்கொண்டு பாதணிகளை செய்வார்கள். இவைகள், 6 மாதத்திற்கு ஒரு முறை, செய்யவேண்டும். இவர்கள், பாதணிகளை, கொண்டு வந்து, அரங்கனுக்கு, சமர்ப்பிக்கும்போது, கோயில் மரியாதையை செய்வார்கள். பழைய பாதணிகளை அரங்கன் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகளில் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, அரங்கன் பாதணிகள்தான், அனுப்பியுள்ள photos இல் காணலாம். ஸ்ரீரங்கம் கோவில் சென்றால், யார் வேண்டுமானாலும், இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். அதிசயமான தெய்வ செயல் இதுதான்.