இரும்பு பயன் பாட்டில் தமிழர்கள்...
Sep 28, 2024
#உலகில்_துரு_பிடிக்காத
#இரும்பை
(4200 ஆண்டுகளுக்கு முன்பே)
#முதலில்_கண்டு_பிடித்தவன்_தமிழன்
#மயிலாடும்பாறை_அகழாய்வு
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் தொகரப்பள்ளி அருகிலுள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தை 2003ஆம் ஆண்டு,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் கா. ராஜன் ஒரு அகழாய்வை மேற்கொண்டார். அந்த அகழாய்வில் நம்பிக்கை தரக்கூடிய தரவுகள் கிடைத்ததையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு புதிதாக அகழாய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்தது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வுகள் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் நடந்தன.இந்த அகழாய்வில் கல்திட்டை பகுதியில் உடைந்த நிலையில் 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும் நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதே பகுதியில் உள்ள கல்திட்டையில் மேலும் மூன்று கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண்குவளை, இரும்புக் கத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
AMS முடிவின் படி,ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு.1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு.2172 என்றும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம்,தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
#கல்_தோன்றி__மண்_தோன்றாக் #காலத்தே_வாளோடு__முன்_தோன்றிய #மூத்தக்_குடி - #தமிழ்_குடி