முத்தரையர் கல்வெட்டுக்கள்
Nov 13, 2024
ஐநூற்றவர் முத்தரையர்களின் கல்வெட்டு திருநந்திக்கரை பட்டாரர் கோவில் கல்வெட்டு ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காக ஒன்பது எருமைகள் கொடையளிக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு தெரிவிக்கிறது. கொடையாளி, சித்தகுட்டி அம்பி ஆகிய ஐந்நூற்றுவ முத்தரையன் இவர் நாஞ்சிநாட்டு வேய்கோட்டுமலையைச் சேர்ந்தவர் கல்வெட்டில் உள்ள காலக்குறிப்பு, கறைக்கண்டீசுவரத்துக் கலங்கள் அழிக்கப்பட்ட ஆண்டு எனக் கூறுகிறது.
கல்வெட்டின் வரிகள்
1 ஸ்வஸ்திஸ்ரீ கறைக்கண்
2 ட ஈச்வரத்துக் கலம
3 ற்ற யாண்டு திருநந்தி
4 க்கரை பட்டாரகர்க்கு
5 நாஞ்சிநாட்டு வெய்கோ
6 ட்டு மலையுடைய
7 சித்தகுட்டி அ
8 ம்பியாயின அஞ்ஞூ
9 ற்றுவ முத்தரையன்
10 நிசதம் உரிய் நெய்
11 எரிவதாக வைச்ச திரு
12 நந்தாவிளக்கு ஒன்று
13 க்கு வைச்ச சாவா மூவா எ
14 ருமை ஒன்பது இவை பெ
15 ருமக்களுக்குச் சமைஞ்(ச)
16 இடையன் ....... மங்கல
17 வன் வய்த்(தா)ன்