முத்தரையர் நாடு
Dec 08, 2024
முத்தரையர் நாடு!
ஆசுகவி மக்கள் கவிஞர் மாரியப்பன்
குளித்தலை 639 105
செல் 9943903019
,நீர் வளங்கள் நிறைந்திருந்த முத்தரையர் !
நெல் வயல்கள் மிகுந்திருக்கும் முத்தரையர் நாடு!
போர் வளங்கள் குவிந்திருந்த முத்தரையர் நாடு!
புகழினிலே நிலைத்திருக்கும் முத்தரையர் நாடு!
பெயர் பெற்றபெரும்பிடுகு முத்தரையர் நாடு!
பெரும்பிடுகு முத்தரையர்
ஆண்டு விட்ட நாடு!
சீர் பெற்ற திருக்
கோவில்கள் நிறைந்திருக்கும் நாடு!
திருப்புமுனை வரலாற்றை படைத்து விட்ட நாடு!
காவிரியால் வளம் பெற்ற முத்தரையர் நாடு!
கன்னித்தமிழை வளர்வித்த
முத்தரையர் நாடு!
பூ விரியும் சோலைகளும் கொண்டிருந்த நாடு
புவியாண்ட பெரும்பிடுகு முத்தரையர் நாடு!
காவிரியும் பெரும்புலவர் போல் கூறும் நாடு!
பாசனத்தால் நெல் குவித்த முத்தரைய நாடு!
காவிரியும் நலமதனை செழிக்க வைத்த நாடு!
களிப்பு உடனே புகழ்கூறும் முத்தரையர் !
பெரும் போர்கள்
பதினாறு வெற்றி கண்ட நாடு!
பெரும்பிடுகு முத்தரையர் ஆண்டு வந்த நாடு !
பெருந்தேவி நன்கொடையை விரித்துரைக்கும் நாடு!
பெரும் பொருளை நன்கொடையாய் தந்துவிட்ட நாடு!
அருமைமிகு முத்தரையர்
புகழுரைக்கும் நாடு!
அன்னை அவள் மாகாளத்து காளா பிடாரி அருளுரைக்கும் நாடு!
பார்புகளும் வெற்றிகளை குவித்து விட்ட நாடு!
பதினாறு
வெற்றிகளை
தந்துவிட்ட நாடு!
சூழ்ந்து வரும் வெம்பகையை சுட்டெரித்த நாடு!
சூட்சுமத்தின் வெற்றிகளை சொல்லுகின்ற நாடு!
காழ்ப் புணர்வு எதிரிகளை கலங்கடித்த நாடு!
களிப்புடனே வெற்றிகளை கண்டெடுத்த நாடு!
ஊழ்வினையால் அமைதியுறும் முத்தரையர் நாடு!
உலகுக்கே மெய் கீர்த்தி உவந்தளித்த நாடு!