விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கDec 05, 2021
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் 1350 ஆண்டுகளுக்கு முன்பு அன்னை மாகாளத்து காளா பிடாரி அம்மன் ஆலயம் அமைத்து வணங்கினார். அன்னை காளா பிடாரி அம்மனை வணங்கி தொடர்ந்து 16 போர்களில் வெற்றி பெற்றார்.மேலும் தமிழில் முதன் முதலில் மெய்க்கீர்த்தி அமைத்து தமிழ் அன்னைக்கும் ,தாய் மொழிக்கும் தொண்டு செய்த தமிழ் பற்றாளர் பேரரசர் சுவரன்மாறன். அவர் அமைத்து வணங்கிய அன்னை காளா பிடாரி கோயில் தற்போது அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக மீட்டுருவாக்கம் அடிப்படையில் 04-12-2021 சனிக்கிழமை அன்று அம்மாவாசை வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அபிசேகம், ஆராதனை ,வழிபாடு,அன்னதானம் நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் தொழில் அதிபர் ஆர்.வி.ராம்பிரபு , துணைத்தலைவர், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் அவர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு அன்னை காளா பிடாரியிடம் அருளாசி பெற்றார். மேலும் கோயில் வளாகத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். விழாவிற்க்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். அறக்கட்டளை துணைத்தலைவர் ஜோதி ,அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் மீ.சந்திரசேகரன், நேமம் தமிழ்வாணன் மற்றும் பலர் செய்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.