முத்தரையர் வரலாற்றில் திருவானைக்காவல்
Jan 07, 2025
மறைந்த முத்தரையர் கல்வெட்டுகள்!
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்!
திருச்சி மாவட்டம்,திருச்சி டவுன் பகுதியில் இருந்து சுமார் 8கி.மி தொலைவில் காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.
திருவானைக்காவல் அல்லது திரு ஆனைக்கா என்று அழைக்கப்படுகிறது.
கோவிலின் காலம்:
தாயி அகிலாண்டநாயகி காவேரி தண்ணீரை எடுத்து அதில் சிவலிங்கம் செய்ப்பட்டது என புராதண வரலாறு கூறுகிறது.கி.பி ஐந்தாம் நூற்றாண்டு கோச்செங்க சோழன் காலத்தில் மாட கோவிலாக எடுப்பிக்கபட்டது என்று கோவில் வரலாறு கூறப்படுகிறது.சோழ நாட்டில் இம்மன்னரால் 70 மாடக் கோவில்கள் கட்டப்படதாகவும் வரலாற்றுநூல்கள் கூறுகிறது.அப்படி என்றால் 5ம் நூற்றாண்டிலே இங்கு ஆலயம் உள்ளது என்பது உறுதியாகிறது.கி.பி 6ம் நூற்றாண்டு முதல் கி.பி 9ம் நூற்றாண்டு வரை திருச்சி,தஞ்சை, புதுகை,கரூர், சிவகங்கை பகுதிகளை முத்தரையர் மரபுகளின் நேரடி ஆட்சி நடைபெற்றுவந்தது.திருவானைக்காவல் சுற்றிய பகுதிகள் அனைத்திலும் முத்தரையர் கால கோவில்கள்,கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகிறது.கி.பி 10ம் நூற்றாண்டுக்கு பிறகு சோழர்களின் கீழ் ஆட்சி நடைபெற்றது.அதன் பின் நாயக்கர்களின் ஆட்சி,அதன் பின் முஸ்லிம்,ஆங்கிலேயர்,இந்திய அரசுக்கு கீழ் என சுமார் 1800ஆண்டு கால வரலாற்றை திருவானைக்காவல் கோவில் கொண்டுள்ளது.
கோவில் கல்வெட்டுகள்:
சோழர்,பாண்டியர், நாயக்கர், செட்டியார்கள் என 10ம் நூற்றாண்டுக்கு பிந்தைய கல்வெட்டுகள் மட்டுமே உள்ளதாக கோவில் கல்வெட்டு நூல்கள் கூறுகிறது.
முத்தரையர் காலம்:
கி.பி 6ம் நூற்றாண்டு முதல் கி.பி 7ம் நூற்றாண்டு வரை இப்பகுதிகளை முத்தரையர் மன்னர்களே ஆட்சி நடத்தி வந்துள்ளனர்.திருவெள்ளறையில் வட ஜம்புகேஸ்வரர் என்ற குடைவரையை
கி.பி 7ம் நூற்றாண்டில் முத்தரையர்கள் எடுப்பித்துள்ளனர்.அப்படியிருக்க திருவானைக்காவல் கோவில் திருப்பணிகள் செய்யாமல் இருந்திருப்பார்களா?திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வழிபடாமல், அகிலாண்டேஸ்வரி தாயை வழிபடாமல் திருவெள்ளறையில் குடைவரையை எடுப்பித்திருக்க முடியுமா? தஞ்சை வல்லத்தை தலைமையிடமாக கொண்ட முத்தரையர்கள் சுமார் 100கி.மி தொலைவில் உள்ள பூவாலைக்குடி,கீரனூர், பொன்னமராவதி பகுதியில் குடைவரை,கோவில் கட்டியவர்கள் வல்லத்திலிருந்து 30கி.மிட்டருக்குள் இருக்கும் திருவானைக்காவல் கோவிலுக்கு திருப்பணி செய்யாமல் இருந்திருப்பார்களா?
கட்டாயம் திருவானைக்காவல் சென்று வழிபட்டு இருப்பர்,திருப்பணிகளை கட்டாயம் செய்திருப்பர்,ஆகையே திருவெள்ளறையில் குடைவரையில் ஜம்புகேஸ்வரரையே அமைத்துள்ளனர்.முத்தரையர் நாட்டில் புதிய கோவிலை எடுப்பித்தும்,பழைய கோவில்களை சீரமைத்தும்,நல்ல நிலையில் உள்ள கோவில்களுக்கு விளக்கு எரிக்க கொடையும் வழங்கிய கல்வெட்டுகள் ஏராலம் இருக்க திருவானைக்கோவிலுக்கும் ஏராலமான திருப்பணிகளை செய்திருப்பர் அது காலத்தில் கல்வெட்டுக்கள் மறைந்து அழிந்து போனது என்பதே உண்மை.
முத்தரையர் கால லிங்கங்கள்:
திருவானைக்காவல் அருகே திருக்காட்டுபள்ளியில் 1008லிங்கங்களை செய்து மாபெரும் சிவ வழிபாடு செய்தவர்கள் முத்தரையர்கள்.காலப்போக்கில் காவேரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு லிங்கங்கள் ஆங்காங்கே சிதறிப்போயின அந்த லிங்கங்களையே பிற்கால சோழர்,நாயக்கர் மன்னர்கள் தங்களின் கோவில்களில் அமைத்தனர்.அதில் சில லிங்கங்கள் திருவானைக்காவலுக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது கள ஆய்வில் உரிதியானது.திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு இடதுபுரம் வசந்த மண்டபம் அமைந்துள்ளது அதற்கு பின்புரமாக மரத்தடியில் சில சிவலங்கள் உள்ளது.அவை முத்தரையர் காலத்தில் ஆனவை "முத்தரையர் பாணி"சிவலங்கம் என்பது உரிதியாகிறது.இந்த லிங்களின் மாதிரி அப்படியே முத்தரையர் கோவில் பகுதியில் உள்ளதுபோலவே நேரடியாக தொடர்புபடுத்துகிறது.
தற்போதைய கல்வெட்டுகளின் நிலை:
நமது ஆய்வில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.கோவிலை சுற்றி ஆங்காங்கே கல்வெட்டுகளை பார்க்க முடிந்தது.சில கல்வெட்டுகள் பதித்த கற்கள் தலைகீழாகவும்,கோவில் சுற்றுபாதையிலும் அமைக்கப்பட்டுள்ளது. முறையாக தொல்லியல்துறை இக்கோவிலை பராமரிப்பது இல்லை என்பது தெளிவாகிறது.கோவில் தூண்கள் அனைத்தும் புதிப்பித்து(பாலிஷ்) செய்தது போல தெறிகிறது.ஆகையால் தூண்களின் பழைமையை அறியமுடியவில்லை. அனைத்தும் 19ம் நூற்றாண்டு கோவில் போல காட்சியளிக்கிறது.
களஆய்வு;
நமது களஆய்வில் கோவில் 1800ஆண்டுகள் பழமை வாந்தது என்றாலும் தற்போதைய நிலையில் இக்கோவில் மிகவும் பிற்காலத்தில் உருவாகிய கோவில் போலவே காணப்படுகிறது.அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் அய்யர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது போல தெறிகிறது.முத்தரையர்களின் பழைமையான அரையர் சேவை அய்யர்களால் நடைபெறுகிறது. கல்வெட்டுக்கள் பராமரிப்பு கிடையாது.பல இடங்களில் கல்வெட்டுகள் சேதமடைந்துள்ளது.பல கல்வெட்டு கற்கல் தலைகீழாக வைத்து புதிப்பிக்கப்பட்டுள்ளது.இக்கோவிலில் அடித்தளம் கல்வெட்டுகள் முழுமையாக அழிந்துவிட்டது.முத்தரையர் கால சிவலிங்கள்கள் மரத்தடியில் போடப்பட்டுள்ளது.முழுமையாக பாலிஷ் செய்யப்பட்டு பழமை மறைந்துவிட்டது. திருவானைக்காவல் சுற்றுப்பகுதியில் பெரும்பான்மையாக முத்தரையர் சமுகத்தினர் வாழ்ந்துவருவது கோவிலுக்கும் முத்தரையர்களுக்கும் உடைய தொடர்பை குறிக்கிறது.மேலும் பிராமணர்கள் கட்டுப்பாட்டில் அகிலாண்டேஸ்வரி தாயை பெரும் தெய்வ வழிபாடாக இருந்தாலும் எங்களை போன்ற முத்துராஜா குலத்துக்கு தாயிதான் குல தெய்வம்.காலத்தில் கல்வெட்டுகள் அழிந்து போகலாம்,வரலாற்றை மறைத்து போகலாம் குல தெய்வ வழிபாடு ஒருபோதும் மறைந்து போகாது என்பதே உண்மை,தர்மம் ஆகும்...
நன்றி...
களஆய்வு பணியில்,
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
#திருவாணைக்காவல் #அகிலாண்டேஸ்வரி #முத்தரையர் #சோழர் #நாயக்கர் #ஜம்புகேஸ்வரர் #ஆயிரம்தளி #மாடக்கோவில் #தூண்கள் #நேமம் #திருக்காட்டுப்பள்ளி #காவேரி #கல்லனை #கலையரசன் #அம்பலகாரர் #ஆய்வுக்கூடம் #முத்தரையர்வரலாறு