|

முத்தரையர் வரலாற்றில் அலங்காநல்லூர்

Jan 15, 2025

"அலங்காநல்லூர் ஜல்லிகட்டும் முத்தரையர்களும்"  ஒட்டு மொத்த தமிழர்களில் கடைசி அடையாளமாக இன்று அடையாளம் காணப்படுவது ஜல்லிக்கட்டு (எ) ஏறுதழுவல் மட்டுமே மிஞ்சி உள்ளது அப்பேற்ப்பட்ட தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டில் "உலக புகழ்ப்பெற்ற" ஜல்லிக்கட்டு என்றால் அது மதுரை மாவட்டம் "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டே" அப்பேற்ப்பட்ட உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வலையர் சமுதாயத்தின் பங்களிப்பை இப்பதிவில் பார்போம்...  அலங்காநல்லூர் மதுரை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குறிஞ்ச்சி,முல்லை,மருத நிலங்கள் ஒரு சேர சங்கமிக்கும் இடம் "இடுக்கியில் இருந்து உற்ப்பத்தி ஆகி பாண்டிய நாடு வரை கரைபுறண்டு ஓடி வரும் முல்லை(பெரியார்) ஆறும் சரி,எங்கள் அலங்கை நாட்டிலே உற்ப்பத்தி ஆகும் சாத்தியாரும் ஆறாகட்டும் அலங்காநல்லூர் நாட்டை வளப்படுத்தி பச்சை பட்டாகவே வைத்துள்ளது" இவ்வாறான பல பெருமைகளை கொண்ட "அலங்கை நாட்டின் தலைநகரான அலங்காநல்லூர் என்னும் சரித்திர புகழ் வாய்ந்த இவ்வூரை உருவாக்கியவர்களே வலையர் சமுதாயத்தினர் தான் ஆம்... மேலூர் அருகே உள்ள "பால்குடி" பகுதியை சேர்ந்த வலையர் இனத்தவர்கள் பால்குடியை விட்டு இடம் பெயர்ந்து இன்றைய அலங்காநல்லூர் என்று அழைக்கபடும் அன்றைய "வலசை"(வலையர் சமுதாயத்தினர் மட்டும் வாழும் ஊர்) என்னும் ஊரின் வடமேற்க்கு எல்லை பகுதியில் உள்ள ஓர் தெப்பக்குளத்தை சுற்றி குடி ஏறி அந்த பகுதியிலே குடியிருப்புகளை அமைத்து கால் நடைகளை வளர்த்தும் தெப்பத்தில் மீன்களை பிடித்து மற்றும் அப்பதியில் வேட்டையாடியும் பிற்காலங்களில் வலசை கிராமத்தின் ஒப்புதல்லேடு விவசாயமும் செய்து ஓர் புதியதோர் கிராமத்தையே உருவாக்கினார்கள் அந்த வலையர் குழுவினர்   அந்த "வலையர் குழுவினரே" தற்போது "#கெங்கை_வலையர்_முத்தரையர் பங்காளிகள்" என்று இன்றைய அலங்காநல்லூர் பேரூரில் அழைக்கப்படுகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us