|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jan 21, 2025

சாத்தன் பூதியான இளங்கோவதி அரையர் மாமன்னர்    கி.பி எட்டாம் நூற்றாண்டு கால கட்டத்தில் சீரமிகு முத்தரையர் நாடான இன்றைய புதுக்கோட்டை பகுதிகளை ஆண்டு வந்த சாத்தன் முத்தரையர் மரபில் வந்த பெரும் மாமன்னர் சாத்தன் பூதி முத்தரையர் ஆவார். உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் முன்மாதிரியாக விளங்கும் நார்த்தாமலை "சாத்தன் பூதிஸ்வரர்" கற்றளி கட்டிய மாமான்னர். நார்த்தாமலை சாத்தம்பூதிச்சுரம் கோவிலில் உள்ள கல்வெட்டு:     “ஸ்வஸ்தி ஸ்ரீ செம்பூதியான    இளங்கோவதி யரையர் எடுப்பித்த கற்றளி     மழை இடித்தழிய மல்லன் விதுமன் ஆயின தென்னவன் தமிழதிரையர் புதுக்கு” இக்கல்வெட்டு கூறும் செய்தி-செம்பூதி என்பது சாத்தன்பூதி என்ற மன்னரால் எடுப்பித்த கோவில் மழையால் அழிந்துபோக மல்லன் விதுமனாகிய தென்னவன் தமிழதியரையன் இதை புதுப்பித்ததாக பொறிக்கப்பட்டுள்ளது. திருமெய்யதை மையமாக கொண்டு ஆண்ட முத்தரையர் சாத்தன் மரபினர்;                     *விடேல் விடுகு சாத்தன் மாறன்            *குவாவன் சாத்தன் விடேல் விடுகு            *சாத்தன் பூதி இளங்கோவதியரையர்            *பூதி களரி அமரூன்றி முத்தரையர்            *சாத்தன் காளி            *சாத்தன் பழியிலி            *பழியிலி சிறிய நங்கை            *பூதி அரிந்தகை சாத்தன் மாறன்            *மல்லன் விதுமன் தென்னவன்                தமிழதிரையன்           *தென்னவன் இளங்கோவரையன் இதுபோன்ற பல மன்னர்கள் ஆட்சிப் புரிந்துள்ளனர்.இதனை கல்வெட்டுக்கள், கோவில்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும் முத்தரையர்கள் மட்டும் வேளீர்கள் மண உறவு தொடர்ப்பு மரபினரும் இப்பகுதிகளை ஆட்சி நடத்தியுள்ளனர்... முத்தரையர் அரசர்களில் சாத்தன் மரபினர்  தொடர்புடைய இன்றைய ஊர்கள்:             திருமயம்,நாத்தாமலை, பூவாளைக்குடி


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us