|

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன்

Feb 11, 2025

பெரும்பிடுகு முத்தரையர் மாண்புரைப்போம்!

பெருமைமிகு ஆட்சி தன்னை எடுத்துரைப்போம்!

தித்திக்கும் தித்திக்கும் பாட்டு இசைப்போம்! 

திக்கு புகழ் பாட்டினிலே திளைத்திருப்போம்! 

நாட்டையும் பலவிரிவாய் பிரித்து வைத்தார்!

நல்லாட்சி செய்வதற்கு வகுத்து வைத்தார்! 

சிற்றூர்கள் பலவற்றை சேர்த்து வைத்தார்! 

சேர்த்ததனை கூற்றமாய் ஆக்கி வைத்தார்!

ஊருக்கு ஒரு அம்பலத்தை ஆக்கி வைத்தார்! 

ஊர் போற்றும் நன்மைகளை செய்ய வைத்தார்! 

திறன் மிக்க நல்லவரை தேர்ந்தெடுத்தார்!  

திக்கெட்டும் சென்று குறை தீர்த்து வைத்தார்! 

அங்கங்கே நீர்நிலைகள் ஆக்கி வைத்தார்! 

அதன் மூலம் விவசாயம் செய்ய  வைத்தார்! 

பாசனக் கால்வாய்கள் வெட்டி வைத்தார்!

பாசனத்தால் விவசாயம் செழிக்க வைத்தார்! 

பஞ்சமில்லா நாடாக ஆக்கி வைத்தார்! 

பசி அறியா மக்களாக வாழ வைத்தார்!

மலைபோல நெல்மணியை குவிக்க வைத்தார்! 

மகிழ்ச்சியுடன் மக்களையும் வாழ வைத்தார்! 

செழிப்பான நாட nக ஆக்கி வைத்தார்!

செந்தமிழை கோபுரத்தில் ஏற்றி வைத்தார்!

முத்தரையர் நாடாக விளங்க வைத்தார்! 

முத்தமிழ் கலை வளர்க்கும் வீடாய் வைத்தார்! 

காலத்தால் அழியாத ஆட்சி தந்தார்!

களிப்புடனே வாழ்வதற்கும் வழிகள் தந்தார்!

மக்களது நெஞ்சங்களில் நிலைத்து நின்றார்!

மக்களாட்சி தத்துவத்தை உணர்த்தி நின்றார்!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us