மருத்துவ துறையில் செல்வி சுபஸ்ரீ முத்தரசி
Feb 17, 2025
கல்வி-- நம் இன தங்க மங்கையின் சாதனை பாரீர்
---------------------------------------------------
மாமனிதர் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஐயா டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு பிடித்தமான திருக்குறள்-- அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அமைந்த
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கலாகா அரண்---421
பகைவர்களாலும் அழிக்க முடியாத பாதுகாப்பு நிறைந்த அறிவாயுதம் கல்வி-----
என்னும் பொருள்படும் .
அத்தகைய ஒரு சிறப்பான கல்வி நிலையை நம் முத்தரைய இன மங்கை-
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த
திரு பெ. மோகனசுந்தரம் எம் ஏ பி எல் ×திருமதி மல்லிகா மோகன், பி காம், இவர்களின் அன்பு மகள், செல்வி டாக்டர் சுபஸ்ரீ அவர்கள் தனக்கும் இச்சமுதாயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்கள்.
அவர் பிளஸ் டூ படிப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். எம் பி பி எஸ் படிப்பில் முதன்மை மாணவியாக வந்து பல தங்கப் பதக்கங்களை, பரிசுகளை வென்றுள்ளார்.
எம் டி ,டாக்டர் மேல்படிப்பிலும் மதிப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார்.
அதற்கு மேலாக டாக்டர் ஆப் மெடிசின் என்று சொல்லப்படுகின்ற D M மருத்துவ படிப்பில் Nephrology/Super speciality (சிறுநீரகம்) துறையில் தமிழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இதற்கு மேலாக டாக்டர் எம் சுபஸ்ரீ அவர்கள் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி நெஃப்ராலஜி பிரிவில் (சிறுநீரகம் )அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்று,D N B பட்டமும் பெற்றார் .
அதற்காக வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை இன்று--17/2/2025-- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் செல்வி டாக்டர் செல்வி சுபஸ்ரீ
M B B S, M D ,D M ,
D N B ,FASN, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
வாழ்க பல்லாண்டு !